வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும்.
காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள்.
இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் தொடங்கி வரும் பிப்ரவரி 14 வரை வேலன்டைன் வீக் (Valentine Week) கொண்டாடம் துவங்கி உள்ளது.
இந்நிலையில் வேலன்டைன் வீக்-கின் இரண்டாம் நாளான இன்று ப்ரோபோஸ் தினம் ( Propose Day ) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்நாளில் உங்கள் காதலருக்கு 'I Love You' என்று சொல்லி ப்ரோபோஸ் செய்ய சில எளிய வழிகள் பார்க்க:-
> காதலிப்பவரை வெளியில் கூட்டி செல்வது.
> சிவப்பு ரோஜா பூக்கள் கொடுப்பது.
> காதலிப்பவருக்கு புடித்த பாடலை இசை அமைப்பது.
> காதல் கடிதம் எழுதிக்கொடுப்பது.