ஊழியர்களுக்கு நல்ல செய்தி: இனி கையில் அதிக சம்பளம் வரும்.. ஊதிய விதிகளில் மாற்றம்!!

Salary Structure: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் மகிழ்ச்சியான செய்திகள் பல கிடைத்துள்ளன.ஊழியர்களின் சம்பள விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 3, 2023, 12:56 PM IST
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.
  • வாரியம் பெர்கிசைட் மதிப்பீட்டின் வரம்பை நிர்ணயித்துள்ளது.
  • இந்த வரம்பு முந்தையதை விட குறைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு நல்ல செய்தி: இனி கையில் அதிக சம்பளம் வரும்.. ஊதிய விதிகளில் மாற்றம்!! title=

சம்பள விதிகள்: புதிய மாதம் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 1 முதல் பல விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் மகிழ்ச்சியான செய்திகள் பல கிடைத்துள்ளன.ஊழியர்களின் சம்பள விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு ஊழியர்களுக்கு  அதிக சம்பளம் கிடைக்கும். முதலாளி / நிர்வாகத்தின் சார்பாக வசிக்க வீடு பெற்று அதற்காக அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் ஏற்படும் ஊழியர்களுக்கு இது பொருந்தும். 

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. வாரியம் பெர்கிசைட் மதிப்பீட்டின் வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த வரம்பு முந்தையதை விட குறைக்கப்பட்டுள்ளது. Perquisite Valuation என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அலுவலகத்திலிருந்து வீடு பெறும் ஊழியர்களின் சம்பளத்தில் வரி விலக்கு என்று அர்த்தம் கொள்ளலாம். CBDT மதிப்பீடு தொடர்பான விதிகளை தளர்த்தியுள்ளது.

CBDT இன் அறிவிப்பின்படி, இப்போது அலுவலகத்தில் இருந்து பெற்ற வீட்டிற்கு ஈடாக சம்பளத்தில் வரி அளவு குறைவாக இருக்கும். அதன் நேரடி விளைவு உங்கள் சம்பளத்தில் தெரியும். வரி குறைவாக இருப்பதால், கையில் கிடைக்கும் சம்பளம், அதாவது டேக் ஹோம் சேலரி அதிகமாக இருக்கும். இந்த விதி செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த மாத சம்பளத்தில் அதிக தொகையை பெறலாம். 

வரி தொடர்பான விதிகள் என்ன?

நிறுவனத்தால் பணியாளருக்கு குடியிருப்பு தங்குமிடம் வழங்கப்பட்டால், பெர்க்விசைட் விதி பொருந்தும். நிறுவனம் தனது பணியாளருக்கு வாடகை இல்லாமல் வசிக்க இந்த வீட்டை வழங்குகிறது. ஆனால், இது வருமான வரி பெர்க்விசைட் விதிகளின் கீழ் செய்யப்படுகிறது. இதில், வாடகை செலுத்தப்படுவதில்லை, ஆனால் வரியின் ஒரு பகுதி ஊழியரின் சம்பளத்தில் கழிக்கப்படுகிறது. பெர்கிசைட் மதிப்பீட்டின் வரம்பு இந்த விலக்குக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சம்பளத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் வரி கணக்கீட்டில் சேர்க்கப்படுகிறது. இது நகரங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | பெண் குழந்தைகளுக்கு பம்பர் பலன்கள்... ரூ. 50 ஆயிரம் தரும் மாநில அரசு!

தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

நகரங்கள் மற்றும் மக்கள்தொகையின் வகைப்பாடு மற்றும் எல்லைகள் 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பதிலாக 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட மக்கள் தொகை வரம்பு 25 லட்சத்துக்குப் பதிலாக 40 லட்சமாகவும், 10 லட்சத்துக்குப் பதிலாக 15 லட்சமாகவும் மாற்றப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிகள், முந்தைய 15%, 10% மற்றும் 7.5% சம்பளத்திலிருந்து 10%, 7.5% மற்றும் 5% என பெர்க்விசிட் விகிதங்களைக் குறைத்துள்ளன.

மத்திய, மாநில ஊழியர்களுக்கும் இது பொருந்தும்

பெர்கிசைட் மதிப்பீட்டின் வரம்பை முந்தையதை ஒப்பிடுகையில், திருத்தம் செய்து CBDT குறைத்துள்ளது. அதாவது இப்போது பெர்கியூசைட் வேல்யூவேஷன், வீட்டுக்குப் பதிலாக ஊழியர்களின் சம்பளத்தில் குறைக்கப்படும். இதில் மத்திய, மாநில ஊழியர்களும் அடங்குவர் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்குவதற்கு நிறுவனத்தால் குடியிருப்பு சொத்து வழங்கப்பட்டு, இந்த சொத்தின் உரிமை நிறுவனத்திடம் உள்ள ஊழியர்களுக்கு இந்த விதி பொருந்தும். 

ஊழியர்களுக்கு எப்படி பலன் கிடைக்கும்?

நீங்களும் நிறுவனம் வழங்கும் வீட்டில் குடியிருந்து, வாடகை செலுத்தாமல் இருந்தால், இந்த விதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பெர்கிசைட் மதிப்பீட்டின் வரம்பு குறைக்கப்பட்டதால், இப்போது வரி பொறுப்பு குறைக்கப்படும். முன்பை விட குறைவான வரி சம்பளத்தில் கழிக்கப்படும். இதன் மூலம் கையில் கிடைக்கும் சம்பளம் அதாவது டேக் ஹோம் சேலரி அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | 7th pay Commission ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... ஊதிய உயர்வு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News