கிரெடிட் கார்டு பில் லேட் ஆகிடுச்சா... கவலையே வேண்டாம் ஒன்றும் ஆகாது!

Credit Card Updates: கிரெடிட் கார்டு பில்லை செலுத்துபவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவை தாண்டி பணம் செலுத்தினாலும், தாமதக் கட்டணம் செலுத்த தேவையில்லை என ஆர்பிஐ விதி கூறுகின்றனது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 25, 2023, 07:21 AM IST
  • தனிப்பட்ட அவசரநிலை அல்லது தொழில்நுட்ப பிழை காரணமாக நிவாரணம் அளிக்கப்படுகிறது.
  • காலக்கெடுவில் இருந்து மூன்று நாள்கள் வரை அவகாசம் வழங்கப்படும்
  • அதன் பின் செலுத்தவில்லை என்றால் தான் மேற்கொண்ட தாமதக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
கிரெடிட் கார்டு பில் லேட் ஆகிடுச்சா... கவலையே வேண்டாம் ஒன்றும் ஆகாது! title=

Credit Card Updates: கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள், அவர்கள் வாங்கிய கடனை குறிப்பிட்ட தேதிகளுக்குள் செலுத்தவில்லை என்றால் கூடுதல் கட்டணங்களைச் செலுத்துகின்றனர். குறிப்பிட்ட அந்த காலக்கெடுவிற்குள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறுவது அவர்களின் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கிறது. 

இருப்பினும், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் நிலுவைத் தொகையை செலுத்த விரும்பினாலும், சில தனிப்பட்ட அவசரநிலை அல்லது தொழில்நுட்ப பிழை காரணமாக, பணம் செலுத்தும் செயல்முறையை முடிக்கத் தவறினால், ரிசர்வ் வங்கி இப்போது ஒரு நிவாரணத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். 

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி, அதன் 2022 "மாஸ்டர் டைரக்ஷனில்", கிரெடிட் கார்டு வழங்குபவர்கள், கிரெடிட் தகவல் நிறுவனங்களுக்கு ஒரு கணக்கை "Past Due" (காலக்கெடுவை தாண்டி) எனக் குறிக்கலாம் மற்றும் கிரெடிட் கார்டு மூன்று நாட்களுக்கு மேல் "Past Due" இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்க முடியும் என்று அறிவித்தது. அதாவது, காலக்கெடுவில் இருந்து மூன்று நாள்களுக்கு மேல் ஆனால் மட்டுமே அபராதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முந்தைய முறையின் கீழ், கிரெடிட் கார்டுதாரர்கள் தங்கள் மாதாந்திர அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலுவைத் தேதியில் அல்லது அதற்கு முன் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், கடுமையான அபராதங்கள், தாமதக் கட்டணம் மற்றும் அவர்களின் கடன் மதிப்பெண்களில் எதிர்மறையான தாக்கமும் கூட ஏற்படுகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு மூலம், வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பணம் செலுத்த கூடுதல் மூன்று நாள் அவகாசம் உள்ளது.

மேலும் படிக்க | வருமான வரிக் கணக்கை நிரப்புவதை சுலபமாக்கிய Phone Pe! எப்படி பூர்த்தி செய்வது?

வழக்கமாக, தாமதமாகப் பணம் செலுத்துவதற்கான செலவு நிர்ணயிக்கப்பட்டு, செலுத்தப்பட வேண்டிய தொகையைப் பொறுத்து வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குபவர்களால் வசூலிக்கப்படும். வழக்கமாக, அதிக கடன் தொகை அதிக தாமதக் கட்டணத்தை ஈர்க்கும்.

மூன்று நாள் சலுகைக் காலத்திற்குப் பிறகும், வாடிக்கையாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறினால், தாமதமாகப் பணம் செலுத்தும் கட்டணத்தை வங்கிகள் எப்படி வசூலிக்கிறது என்பதை இங்கு காண்போம். 

வெவ்வேறு வங்கிகளால் விதிக்கப்படும் தாமதக் கட்டணம்

தாமதக் கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மற்றும் கார்டு வழங்குபவருக்கு வரிகளுடன் வேறுபடலாம். உதாரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு பில்களை செலுத்தத் தவறியதற்கான தாமதக் கட்டணம் ரூ.400-இல் இருந்து வசூலிக்கிறது.

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால், நிலுவைத் தொகை ரூ.500க்கு மேல் மற்றும் ரூ.1000க்குக் குறைவாக இருந்தால், ரூ.400 தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை நிலுவைத் தொகை இருந்தால் ரூ.750 வசூலிக்கப்படுகிறது. ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு, ரூ.950 அபராதம் விதிக்கப்படுகிறது; ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை நிலுவையில் உள்ள தொகைகளுக்கு ரூ.1100 அபராதம் விதிக்கப்படுகிறது; மேலும் ரூ.50,000க்கு மேல் நிலுவைத் தொகைக்கு ரூ.1,300 அபராதம் விதிக்கப்படுகிறது.

முழு நிலுவைத் தொகையும் செலுத்தப்படும் வரை ஒவ்வொரு கட்டண சுழற்சியிலும் கட்டணம் வசூலிக்கப்படும். தாமதக் கட்டணங்களுடன், வங்கி அபராத வட்டியையும் விதிக்கலாம், குறிப்பிட்ட நிலுவைத் தொகைக்கு மட்டுமே, முழு அசல் தொகைக்கும் அல்ல என்பதையும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | Indian Railways மிகப்பெரிய அப்டேட்: இனி இவர்களுக்குதான் லோயர் பர்த்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News