WOW....செல்ஃபி எடுப்பதற்காகவே அமைக்கப்பட்ட பிரத்யேக ரயில் நிலையம்

செல்ஃபி எடுப்பதற்காகவே ஹான்நோயி நகரத்தில் அமைந்திருக்கும் பிரேஞ்சு ரயில்பாதைகள்.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2018, 08:04 PM IST
WOW....செல்ஃபி எடுப்பதற்காகவே அமைக்கப்பட்ட பிரத்யேக ரயில் நிலையம் title=

செல்ஃபி எடுப்பதற்காகவே ஹான்நோயி நகரத்தில் அமைந்திருக்கும் பிரேஞ்சு ரயில்பாதைகள்.....

இந்தியாவில் மட்டும் இல்லை உலக நாடுகள் முழுவதும் இளையதலைமுறையினரிடம் தலைவிரித்து ஆடும் பழக்கங்களில் ஒன்று செல்ஃபி மோகம். செல்ஃபி மோகத்தால் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் செல்ஃபி முகத்தால் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.   

உலகம் முழுவதும் செல்ஃபி எடுக்கும் போது மட்டும் இறந்தவர்களில் 72.5% பேர் ஆண்கள் என்று இது பற்றிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு  வெறும் மூன்றாக இருந்த செல்ஃபி மரணங்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 98 ஆகவும், 2017 ஆம் ஆண்டில் 93 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

பல மரணங்களில், இறப்புக்கான காரணமாக செல்ஃபி எடுத்ததை அறிவிக்கப்படவில்லை என்பதால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

வியட்நத்தில் உள்ள ஹான்நோயி நகரத்தில் அமைந்திருக்கும் பண்டைய காலத்து பிரேஞ்சு ரயில்பாதைகள் இப்போது செல்ஃபி தளமாக மாறிவருகிறது. அந்த ரயில் நிலையம் தற்போது அங்கு வரும் செல்ஃபி பிரியர்கள் மற்றும் அங்குத் தொடங்கப்பட்டுள்ள உணவகத்துக்கு வருபவர்களால் நிரம்பி வருகின்றது.
புகைப்படங்கள் எடுக்க ரயில்பாதைகள் எவ்வளவு அழகாக தோன்றினாலும், அங்குள்ள குறுகிய சாலைகளால் மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் ரயில் வரும் பாதை என்பதால் ஆபத்து நிறைந்தா பகுதியாக மாறிவருகிறது.

இரயிலுக்கு அருகே சென்று புகைப்படம் எடுப்பது மிகவும் சுவரசியமாக இருந்தாலும், அதனருகே நிற்பது பயமாக உள்ளது என ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுற்றிலா பயணி மீஷேல் ரிச்சார்டிஸ் கூறினார். இந்த வழிதடங்கள் பழைய பிரேஞ்சு ஆட்சியாளர்களால் அமைகப்பட்டவை. இப்பாதைகள் மக்கள் செல்வதர்க்கும், பொருட்கள் கொண்டுவருவதர்க்கும், வியட்னாம், இந்தோ-சீன, லாஓஸ் மற்றும் கம்போடியா மக்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னர், அங்கே நடந்த வியட்னம் போரில் இப்பாதைகள் மிக மோசமாக பாதிக்கபட்டன. 

தற்போது பயன்பாட்டில் உள்ள இப்பாதைகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிப்பதால், சுற்றிலா பயணிகள் உபயோகிக்க ஏதுவாகவும் உள்ளது. ஆனால், இப்போதைய நாட்களில் இவ்விடத்தை செல்ஃபி ஜோன்னாக மாற்றிவருகின்றனர். வீடுகள் மற்றும் உணவகங்கள் இங்கு நிறைந்திருப்பதால் டிராவல் போட்டோகிராஃபர்கள் மற்றும் தொழில் நடத்துவபர்கள் இங்கே வசிக்க தொடங்கியுள்ளனர். 

இந்த இடத்துக்கு ஒரு வசிகர குணமுண்டு, பால்கனிகளில் தொங்கும் பூக்கள், நெருங்கிய பழைய கட்டிடங்கள், வீட்டின் அருகிலேயே இரயில் பாதைகள் என பல விஷயங்கள் ரசிக்கும்படி உள்ளன என ஹாங்காங்யைச் சேர்ந்த சுற்றிலா பயணி எட் வேர்டு திசிம் தெரிவித்தார். இரயில் வந்த உடனே எனக்கு கிருத்துமஸ் வந்தது போல் தோன்றுகிறது பீரட்டனை சேர்ந்த சுற்றிலா பயணி பாவுல் ஹார்திமன் தெரிவித்தார். 'மேலும், அங்கு இரயில் வரும் பொழுது அங்கு காத்திருந்த மக்கள் உடனடியாக போன்கள் மூலம் புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Please stand back - Train approaching. #hanoi #vietnam #goodtimes #throwback #trainstreethanoi

A post shared by Florian Klingebiel (@florianklingebiel) on

 

Trending News