தற்போதுள்ள சூழ்நிலையில், வேலை, இயற்கை மாசுபாடு மற்றும் நிலையான முடி பராமரிப்பு இல்லாமை, ரசாயன ஷாம்புகள் பயன்பாடு ஆகியவை முடியின் தரம், சேதம் மற்றும் முடி உதிர்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினைகள் காரணமாக, அதிகமானோருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்து வருகிறது. இவற்றை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அதிக செலவு இல்லாமல் சரி செய்யலாம்.
முட்டைகள் புரதச்சத்து நிறைந்தவை, இவை இயற்கையான கண்டிஷனர்களாக செயல்பட்டு முடியை மென்மையாக்கி முடி உதிர்வை கட்டுப்படுத்துகின்றன. முட்டையை முடிக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்துவது முடி வளர்ச்சி மற்றும் முடிக்கு அதிக சத்துக்களை வழங்குகிறது. மஞ்சள் கருவில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன, இது ஈரப்பதத்தை வைத்திருக்க உதவுகிறது மற்றும் முடி பளபளப்பாகவும் இருக்கும். மேலும் முடியில் 80% புரதம் இருப்பதால், புரோட்டீன் நிறைந்த முட்டைகளை முடியில் தடவுவது, ஸ்டைலிங் செய்வதன் மூலம் இழந்த புரதத்தை கொண்டு வரவும், முடியை வலுவாகவும், வெப்பத்தை தாங்கி நிற்கவும் உதவுகிறது. முட்டையை தலைமுடியில் தடவி, அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு ஷாம்பு கொண்டு கழுவவும்.
மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவும். இது உங்கள் தலைமுடியில் புரத இழப்பைத் தடுக்க உதவுகிறது. நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பும், பின்பும் முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது. மேலும், தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சேர்த்து முடியில் தடவினால், முடியின் வலிமை அதிகரித்து, அதிக வளர்ச்சிக்கு உதவுகிறது. உங்கள் உச்சந்தலைக்கு நல்லது மட்டுமல்லாமல், தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்குகிறது. இது எளிதில் உறிஞ்சப்படுவதால், உலர்ந்த முடியை சரிசெய்வதில் மற்ற எண்ணெய்களை விட இது சிறப்பாக செயல்படுகிறது.
ஆலிவ் எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது மற்றும் இது உலர்ந்த முடியை மென்மையாக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் முடி வளர்ச்சி உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொண்டுள்ளது. இவை இரசாயனங்கள் அல்லது அதிகப்படியான ஸ்டைலிங் மூலம் முடிக்கு ஏற்படும் பாதிப்பை குணப்படுத்துகிறது. ஆலிவ் எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவதால் அடர்த்தியான முடியை பெற முடியும். இது முடியை மென்மையாக்கி, உலர்ந்த பகுதிகளை ஈரப்பதமாக்குகிறது.
கற்றாழை தோல் மற்றும் முடி இரண்டிற்கும் நன்மைகளை கொண்டுள்ளது. கற்றாழை எண்ணெயை நேரடியாக முடி மற்றும் உச்சந்தலையில் தடவுவது, முடியை வலுப்படுத்தி அடர்த்தியாக மாற்ற உதவும். கற்றாழை மூலம் தயாரிக்கப்பட்ட ஜெல் மற்றும் லோஷன்களை பயன்படுத்துவது முடிக்கு அதிகளவில் ஊட்டமளிக்கும். கற்றாழையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் கூந்தலில் தேய்த்து, நன்கு ஊறவைத்தால் சேதமடைந்த மற்றும் உலர்ந்த முடியை சரி செய்ய முடியும். ஒரு மணி நேரம் ஊற வைத்த பிறகு, லேசான ஷாம்பூ பயன்படுத்தி கழுவவும்.
பொதுவாக நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள தீர்வாக கருதப்படுகிறது. இது முடியின் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவுகிறது. இவற்றை வெவ்வேறு வழிகளில் முடிக்கு தடவலாம். நெல்லிக்காய்யின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பொடுகு வராமல் தடுக்கிறது. மருதாணி பொடியை நெல்லிக்காய் சாறுடன் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை தயார் செய்யவும். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடி முழுவதும் தடவவும். 1 மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பூ பயன்படுத்தி கழுவுங்கள்.
மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ