மணப்பெண் அலங்காரத்தில் மணமகனும், மணமகன் அலங்காரத்தில் மணப்பெண்ணும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரல்..!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்... அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது திருமண நாள் மறக்க முடியாத அற்புதமான நிகழ்வாக அவர்களின் மனதில் பதிந்திருக்கும். இந்நிலையில், லண்டனில் மணப்பெண் அலங்காரத்தில் மணமகனும், மணமகன் அலங்காரத்தில் மணப்பெண்ணும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ண்டனில் பாபி குக் - சியாரா ஓ டன்னேல் என்ற தம்பதியின் திருமணம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்ன செய்துள்ளார்கள் என்று பார்கிரீர்களா..?... அவர்கள் ரிவர்சல் தீம் எனப்படும் மணப்பெண் செய்ய வேண்டியதை எல்லாம் மணமகன் செய்தும், மணமகன் செய்ய வேண்டியதை எல்லாம் மணப்பெண் செய்வதுமான தீமை தேர்வு செய்தனர்.
அதாவது, பாபி குக் மணப்பெண் உடையை அணிந்துகொண்டார். சியாரா மணமகன் சூட்டை அணிந்து கொண்டார். லண்டனிலுள்ள திருமண முறையில் விருந்தினர்கள் அமர்ந்திருக்க அவர்களின் நடுவே மணமகள் மணமகனை அழைத்து வரும் சம்பர்தாயம் இருந்தது. இந்த சம்பர்தாயமும் இந்த தீமில் மாற்றப்பட்டு மணமகன் மணப்பெண்ணை அழைத்து வந்தார். இந்த திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.