தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்தால் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வெளியூருக்கு பயணம் செய்ய விரும்புவோம். இது போன்ற சமயங்களில் செலவை கம்மி செய்வதற்காகவும், நல்ல உணவுகளை சாப்பிடுவதற்காகவும் வீட்டில் இருந்தே உணவுகளை கொண்டு செல்வது வழக்கும். இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாத உணவுகளை தயார் செய்து கொண்டு செல்வோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும்போது அந்த ஊருக்கு ஏற்றார் போல உணவுகள் இருக்கும். அவை ஒரு சிலருக்கு ஒத்துப்போகாது. இதனால் உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பயணமும் நன்றாக அமையாது. எனவே வீட்டில் சமைத்த உணவுகள் உடலுக்கு எந்தவித தீங்கும் செய்யாது என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர்.
மேலும் படிக்க | மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!!
நீங்களும் உங்கள் குடும்பதினருடன் அல்லது நண்பர்களுடன் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்கள் என்றால் பின்வரும் உணவுகளை உங்களுடன் வைத்திருக்கலாம். இது போன்ற உணவுகள் சீக்கிரம் கெட்டுப்போகாது மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயணிக்கும். மேலும் உங்களது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்கும். பொதுவாக காலையில் இட்லி மற்றும் சட்னி, மதியம் புளியோதரை, லெமன், தயிர் போன்ற உணவுகளை சமைத்து எடுத்து செல்வது வழக்கம். இது போக பயணத்தின் போது எடுத்து செல்ல சில உணவுகள் உள்ளன.
இனிப்பு உணவுகள்: நீங்கள் சுற்றுலா செல்லும் போது ராகி லட்டுவை எடுத்து செல்வது நல்ல தேர்வாக இருக்கும். இதில் நெய் மற்றும் வெல்லம் அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே ஆரோக்கியத்தில் எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது. மேலும் பயணத்தின் போது இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்ததாக இருக்கும், அதிகம் பாதிக்காது. இதனால் தேவையில்லாத உணவுகளை சாப்பிடுவது தடுக்கப்படும்.
நட்ஸ் வகைகள்: பயணத்தின் போது உப்பு சேர்க்கப்பட்ட சாப்பிடும் பருப்புகளை உங்களுடன் எடுத்துச் செல்லலாம். நட்ஸ் எப்போதும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவு பொருளாகும். அவற்றில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாது இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையானவை. எனவே 2 முதல் 3 நாட்கள் பயணம் செய்யும் போது உங்களுடன் நட்ஸ் வகைகளை எடுத்துச் செல்லலாம். மேலும் இந்த நட்ஸை வீட்டில் வருது அதனுடன் உப்பு சேர்த்து கொண்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உலர் காலை உணவு: வெளியூர் பயணம் செய்யும் போது உங்களுடன் கக்ரா மற்றும் சிவ்டா போன்ற உலர் தின்பண்டங்களை எடுத்துச் செல்லலாம். மேலும் உலர்ந்த சிவ்டா அல்லது நம்கீன் அல்லது வறுத்த பருப்பு பொருட்களை எடுத்துச் செல்லலாம். நல்ல உணவுகள் கிடைக்காத பட்சத்தில் இவை பசியை போக்கும். இவை எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டும் போகாது.
மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனை இருக்கா..... நீங்கள் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ