புதுடெல்லி: தற்போது, முழு நாடும் கொரோனா தொற்றுநோயின் பாதிப்புகளால் அவதியில் உள்ளது. சில இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளும், சில இடங்களில் ஊரடங்குகளும் அமலில் உள்ளன. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், உங்கள் ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ் (RC) தொடர்பான பணிகளை நீங்கள் செய்ய வேண்டுமானால், அவற்றை செய்து முடிப்பது கடினமாக இருக்கும். இவற்றை செய்ய நீங்கள் ஆர்டிஓவுக்கு செல்ல வேண்டும் என்பதால், இதில் உங்களுக்கு சிக்கல் ஏர்படலாம். ஆனால், இனி இதற்காக கவலைப்பட வேண்டாம். இனி ஓட்டுநர் உரிமம் பெற நீங்கள் ஆர்.டி.ஓ செல்லத் தேவையில்லை.
DL, RC தொடர்பான அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்கள்
ஓட்டுநர் உரிமத்தை (Driving License) உருவாக்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்துள்ளது. ஆகையால் இனி இவற்றுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை.
ஓட்டுநர் உரிமத்தின் முழு செயல்முறையும் ஆன்லைனில் நடக்கும்
புதிய விதிப்படி, Learner's license பெறுவதற்கான முழு செயல்முறையும் ஆன்லைனில் நடக்கும். அதாவது, விண்ணப்பம் முதல் உரிமம் அச்சிடுதல் வரை முழு செயல்முறையும் ஆன்லைனில் நடக்கும். கூடுதலாக, மின்னணு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை மருத்துவ சான்றிதழ்கள், லர்னர்ஸ் லைசன்ஸ், ஓட்டுநர் உரிம சரண் செய்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம்.
ALSO READ: Driving License: இங்கு பயிற்சி பெற்றால் ‘டெஸ்ட்’ இல்லாமல் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்
RC புதுப்பித்தலுக்கான வசதி
இதுபோன்ற வழிகாட்டுதல்களைக் கொண்டுவருவதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்றால், ஒரு புதிய வாகனத்தை பதிவு செய்வதற்கான செயல்முறையை இது மிக எளிதாக்கும். பதிவு சான்றிதழ் (RC) புதுப்பித்தலை இப்போது 60 நாட்களுக்கு முன்பே செய்து விடலாம். இது தவிர, தற்காலிக பதிவுக்கான கால வரம்பும் 1 மாதத்திலிருந்து 6 மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது.
ஓட்டுநர் சோதனைக்கு RTO க்கு செல்ல தேவையில்லை
இதனுடன், லர்னர்ஸ் லைசன்ஸ் உரிமத்திற்கான செயல்பாட்டில் அரசாங்கம் சில மாற்றங்களையும் செய்துள்ளது. ஓட்டுநர் சோதனைக்காக இனி நீங்கள் ஆர்டிஓவுக்குச் செல்லத் தேவையில்லை, இந்த வேலையை ஆன்லைனில் டுடோரியல் மூலம் வீட்டில் செய்யலாம். இந்த நடவடிக்கை கொரோனா தொற்றுநோய்களின் சமயத்தில் பெரும் நிவாரணமாக உள்ளது.
DL, RC-ன் செல்லுபடி அதிகரிக்கப்பட்டுள்ளது
மார்ச் மாத இறுதியில், வளர்ந்து வரும் கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம் (DL), பதிவுச் சான்றிதழ் (RC), உடற்தகுதி சான்றிதழ் போன்ற மோட்டார் வாகன சான்றிதழ்களின் பர்மிட் ஆகியவற்றின் செல்லுபடியாகும் தன்மை 2021 30 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. முழு நாட்டிலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையின் காரணமாக, 2020 பிப்ரவரி 1 அன்று காலாவதியாகவிருந்த ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மையை 20 ஜூன் 2021 வரை நீட்டித்து அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
ALSO READ: Driving License: வாகனம் ஓட்டும்போது இந்த விதிகளை மீறினால் என்ன நடக்கும் என்று தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR