Railway Latest News: ரயிலில் பயணம் செய்வது என்பது இந்திய மத்திய தர வர்க்கத்தினருக்கு கட்டுப்படியாகும் வழிகளில் ஒன்று. அதிலும், முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை இதனை கொஞ்சம் எளிமையாக்கிவிட்டது. இதனால், நாடு முழுவதும் மக்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்வது பெரும் பணியாகிவிட்டது. பொங்கலுக்கு டிக்கெட் எடுக்க மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிட வேண்டிய நிலை உள்ளது.
இப்படி திட்டமிட்டாலும், சில நேரங்களில் வெயிட்டிங் லிஸ்ட், ஆர்ஏசி உள்ளிட்டவைதான் கிடைக்கும். எனவே, மிகுந்த ஏமாற்றம் மட்டுமின்றி அடுத்த திட்டமிடலுக்கும் சிரமம் ஏற்படும். இதில், தனியாக போவதை விட குடும்பமாக செல்வது கூடுதல் சிரமம். ஆனால், ரயில்வே டிக்கெட் முன்பதிவு என்பது ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
தற்போது அந்த சிரமங்கள் ஏதுமின்றி நீங்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, படுக்கை வசதிகொண்ட இருக்கைகளில் பயணிக்கலாம். அப்படி செய்தால், டிடிஆர் அபராதம் போட்டுவிடுவாரே என யோசிக்காதீர்கள், இனி நீங்கள் ஒரு ரூபாய் கூட அதிகம் கொடுக்காமல், சாதரண டிக்கெட் விலையில், ஸ்லீப்பர் கிளாஸில் பயணிக்கலாம்.
ஆம், அதற்கான அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. வயதான மற்றும் வசதி வாய்ப்பற்றவர்களும், முதியோர்களும் இனி இப்படி பயணிக்கலாம்.
80 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளுடன் செல்லும் ஸ்லீப்பர் பெட்டிகள் உடன் இயங்கும் அனைத்து ரயில்களின் விவரத்தையும் அனைத்து ரயில்வே பிரிவுகளின் நிர்வாகத்திடம் ரயில்வே வாரியம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏழை, எளிய பயணிகள் பயணம் செய்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் அனைத்து ஸ்லீப்பர் பெட்டிகளையும் பொது பெட்டிகளாக மாற்ற ரயில்வே பரிசீலித்து வருகிறது.
குளிர் காரணமாக பயணிகள் அனைவரும் குளிர்சாதன பெட்டிகளில்தான் பயணிக்கின்றனர். குளிர்காலத்தில், பனி குளிர்சாதன பெட்டிகளுக்குள் வராமல் இருக்கும் என்பதால், பல பயணிகள் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்யாமல் ஏசி கோச்சில் பயணிக்க விரும்புகின்றனர். இதன் காரணமாக ஸ்லீப்பர் கோச்சில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனுடன், ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.
பொதுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குளிர்காலம் காரணமாக, ஸ்லீப்பர் கோச்சில் 80 சதவீத இருக்கைகள் காலியாக உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது. அதே சமயம் இது தவிர பொது டிக்கெட்டில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஸ்லீப்பர் கோச்சுக்கு பொதுப்பெட்டி அந்தஸ்தை வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்த பெட்டிகளுக்கு வெளியே முன்பதிவு செய்யப்படாதது எழுதப்படும் என்று ரயில்வே கூறியுள்ளது, ஆனால் இந்த பெட்டிகளில் மிடில் பெர்த் திறக்க அனுமதிக்கப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இந்த 5, 10 ரூபாய் காயின் உங்ககிட்ட இருக்கா? லட்சம் லட்சமாய் அள்ளலாம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ