SBI Good News: கோவிட் சிகிச்சைக்கு மிகப் பெரிய உதவி அளிக்கிறது வங்கி, தகவல் இதோ

கோவிட் -19 தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையை பல வகைகளில் பாதித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு சில நல்ல செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 14, 2021, 04:17 PM IST
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சில நல்ல செய்திகளைக் கொண்டு வந்துள்ளது.
  • SBI வாடிக்கையாளர்களுக்கு உதவ எஸ்பிஐ கவச் தனிநபர் கடனை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கவச் தனிநபர் கடன் COVID-19 சிகிச்சைக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.
SBI Good News: கோவிட் சிகிச்சைக்கு மிகப் பெரிய உதவி அளிக்கிறது வங்கி, தகவல் இதோ  title=

SBI KAVACH Personal Loan: கோவிட் -19 தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையை பல வகைகளில் பாதித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு சில நல்ல செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. 

கோவிட் -19 (COVID-19) க்கு எதிரான சிகிச்சைக்காக SBI வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி வழங்குவதற்காக எஸ்பிஐ கவச் தனிநபர் கடனை (SBI Kavach Personal Loan) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கவச் தனிநபர் கடனை அறிமுகப்படுத்தியதன் மூலம், SBI வாடிக்கையாளர்கள் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் தங்கள் வங்கியிடமிருந்து ஆதரவைப் பெறுவார்கள் என்பது உறுதி. கூடுதல் விவரங்களைப் பெற, SBI வாடிக்கையாளர்கள் bank.sbi ஐ பார்வையிடலாம் அல்லது 1800 11 2211 என்ற எண்ணில் அழைக்கலாம்.

சமீபத்தில், நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான SBI, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு ட்வீட்டை வெளியிட்டது. இதில், "கவச் தனிநபர் கடனை எஸ்பிஐ அறிமுகப்படுத்துகிறது. பயங்கரமான ஒரு வைரஸை நாடு எதிர்த்துப் போராடுகையில், நாங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிட் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்குகிறோம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: SBI: பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

கவச் தனிநபர் கடன் COVID-19 சிகிச்சைக்கு ஆண்டுக்கு 8.50 சதவீதம் என்ற மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கிறது என்பதை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் (SBI Customers) கவனிக்க வேண்டும். இந்த கடனைப் பெறுவதற்கு, ஒரு எஸ்பிஐ வாடிக்கையாளர் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் அதிகபட்சமாக ரூ .5 லட்சம் வரை கவச்சின் கீழ் கடன் வாங்கலாம். கடனை, மூன்று மாத கால கடன் அவகாச காலத்தை உள்ளடக்கிய 60 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், இந்த கடனைப் பெறுவதற்கு, ஒருவர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

SBI வலைத்தளத்தின்படி, இந்த கடனின் நோக்கம் 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் அல்லது அவரது குடும்ப உறுப்பினரின் சிகிச்சைக்கானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கடனுக்கான இலக்கு குழுவில், வங்கியின் வாடிக்கையாளர்களாக உள்ள மாத சம்பளம் வாங்குவோர், சம்பளம் வாங்காதோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் உள்ளனர். 

கவச் தனிநபர் கடன் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, வங்கி வாடிக்கையாளர்கள், bank.sbi இல், எஸ்.பி.ஐ.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்து விவரங்களை அறியலாம், அல்லது 1800 11 2211 என்ற எண்ணில் அழைக்கலாம்.

ALSO READ: Corona சிகிச்சைக்காக Rs 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் கொடுக்கும் வங்கி எது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News