New Ration Card News Tamil : மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசு கொடுக்க தொடங்கியதில் இருந்து புதிய ரேஷன் கார்டு வேண்டும் எனக்கோரி விண்ணப்பித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ஏனென்றால், விண்ணபித்தவர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் தீர விசாரிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை கொடுத்திருந்தால் மட்டுமே ரேஷன் கார்டு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒருவேளை அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனடியாக அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
புதிய ரேஷன் கார்டு விநியோகம்
தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டு விநியோகம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதிக விண்ணப்பங்கள் இருப்பதால் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தேதி வாரியாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. இப்போதைய சூழலில் ஜூன் 15 ஆம் தேதி மற்றும் அதற்கு முன்பு வரை விண்ணப்பித்தவர்களுக்கான விண்ணபங்கள் பரிசீலனை நடந்து வருகிறது. விண்ணப்ப தாரர்களின் இருப்பிடம், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என பரிசீலிக்கப்பட்டு, உண்மை என தெரிந்த பிறகு அந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒருசில வாரங்களில் புதிய ரேஷன் கார்டு, அதாவது ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.
எப்போது ரேஷன் கார்டு கிடைக்கும்?
ஒருவேளை நீங்கள் ஜூன் 15 ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பித்தவர்கள் என்றால் உங்களுக்கான ரேஷன் கார்டு கிடைக்க இன்னும் ஒருசில மாதங்கள் ஆகும். அதாவது டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதங்களில் உங்கள் கைகளில் புதிய ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், ரேஷன் கார்டு வாங்கியவர்கள் உடனே உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாமா? என்றால், அதற்கான விண்ணபங்கள் பரிசீலனைக்கும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை உடனே கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. விண்ணபங்களின் பரிசீலனைக்கு அரசு அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் காலத்தைப் பொறுத்ததே. அதிகபட்சம் அடுத்த பிப்ரவரி மாதம் முதல் உங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ரேஷன் கார்டுக்கு தேவையான ஆவணங்கள்
இருப்பிட முகவரி சான்று, ஆதார் அட்டை, குடும்ப தலைவரின் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை ஜெராக்ஸ், வாடகை ஒப்பந்தம் (வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மட்டும்), மின் கட்டண பில் அல்லது வீட்டு வரி ரசீது. திருமணமானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் திருமணச் சான்று, பழைய ரேஷன் கார்டில் பெயர் நீக்கப்பட்டதற்கான சான்று இணைக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அங்கு இருக்கும் குடிமைப் பொருள் வழங்கல் துறையிடம் ஆப்லைன் முறையிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஆவணங்களை இணைத்து கொடுக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ