விரைவில் இனி நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பல டிஜிட்டல் சேவைகளை நீங்கள் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களில் ஆதார் அட்டை, பான் அட்டை ஆகியவற்றைப் பெறலாம். வருமான வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள முடியும். உத்தரபிரதேசத்தில் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ரயில் நிலையங்களில் இந்த டிஜிட்டல் சேவை (Railways Digital Seva) தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு "RailWire Saathi Kiosks" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் சேவைகள் "CSC e-Governance Services India Limited" மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 200 ரயில் நிலையங்களில் (Railway Stations) இந்த சேவைகள் தொடங்கப்படும். இந்த சேவைகள் தொடங்கப்பட்ட பிறகு, பயணிகள் செல்போன் ரீசார்ஜ், மின் கட்டணம் செலுத்துதல் உட்பட பல பணிகளை மேற்கொள்ளலாம்.
வரும் காலங்களில், இந்த சேவை மற்ற பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் தொடங்கப்பட உள்ளது. அதுவும் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ALSO READ | டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை பலமுறை எட்டி உதைத்த காவல்துறை -Viral Video
எந்தெந்த ரயில் நிலையங்களில் RailWire Saathi Kiosks சேவை கிடைக்கும்?
தெற்கு மத்திய ரயில்வே மண்டலம் 44
வடகிழக்கு எல்லைப்புற பிரதேசம் மண்டலம் -20,
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் -13,
மேற்கு ரயில்வே மண்டலம் -15,
வடக்கு ரயில்வே மண்டலம் -25,
மேற்கு-மத்திய இரயில்வே மண்டலம் -12,
கிழக்குக் கடற்கரை இரயில்வே மண்டலம் -13
வடகிழக்கு இரயில்வே மண்டலம் -56
தற்போது, இந்திய ரெயில்டெல் நிறுவனம் (Railtel Corporation of India) மூலம் "Railwire" திட்டத்தின் கீழ் 6,090 நிலையங்களில் பொது Wi-Fi வசதியை வழங்குகிறது. இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த Wi-Fi நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இதில், 5,000 நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன. CSC உடன் இணைந்து கிராமப்புறங்களில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்க RailTel திட்டமிட்டுள்ளது.
ALSO READ | Indian Railways: ரயில் பயண திட்டத்தில் திடீர் மாற்றம்? பயணத் தேதியை மாற்றலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR