LIC வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. உங்களுடைய எல்ஐசி பாலிசி ஏதேனும் காலாவதியாகிவிட்டால், மார்ச் 25க்குள் அதைத் புதுப்பிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India - LIC) பிப்ரவரி 7 முதல் சிறப்பு புதுப்பிப்பு திட்டத்தை தொடங்குகிறது. இதன் கீழ், பிப்ரவரி 7 முதல் மார்ச் 25 வரை எப்போது வேண்டுமானாலும் காலவதியான உங்கள் பாலிசியைத் புதுப்பிக்கலாம்.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 25, 2022 வரை வாய்ப்பு
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான LIC தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. பிரீமியம் செலுத்தாமல் காலாவதியாகிவிட்ட, முதிர்வு காலம் நிறைவடையாத பாலிசிகளை இந்த திட்டத்தில் புதுப்பிக்கலாம் என்று எல்ஐசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வசதியை பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25, 2022 வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, இதற்கிடையில், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் லேப்ஸ் ஆன பாலிசியைத் ரென்யூ செய்யலாம். தாமதமாக செலுத்துவதற்கான அபராத தொகையும் குறைக்கப்படும்.
ALSO READ | PAN card: ‘இந்த’ தவறுக்கு ₹10,000 அபராதம் விதிக்கப்படலாம்!
புதுப்பிப்பதில் தள்ளுபடி கிடைக்கும்
இதைப் பற்றிய தகவல்களை அளித்த, எல்ஐசி, “கோவிட்-19 தொற்று நோய் காப்பீட்டுத் தொகையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது, இந்நிலையில், எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசியை புதுப்பிக்க இந்த திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாகும். காலாவதியான பாலிசியை புதுப்பிப்பதற்கான கட்டணங்களுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த சலுகை டெர்ம் பாலிசி மற்றும் அதிக ரிஸ்க் கவரேஜ் உள்ள காப்பீட்டு திட்டங்களில் கிடைக்காது.
இதனுடன், பாலிசியை மீண்டும் புதுபிக்க தேவையான மருத்துவ அறிக்கையில் எந்த விதமான சலுகையும் வழங்கப்படாது. ஆனால் உடல்நலம் மற்றும் மைக்ரோ இன்சூரன்ஸ் திட்டங்களில், தாமதமான பிரீமியம் செலுத்துவதற்கான கட்டணங்கள் கண்டிப்பாக தள்ளுபடி செய்யப்படும். இதுமட்டுமின்றி, 5 ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தாத பாலிசியையும் இந்த திட்டத்தின் கீழ் புதுப்பிக்க முடியும். எனவே இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் பாலிசியும் காலாவதி ஆகி இருந்தால், இந்தக் காலகட்டத்தில் அதை புதுப்பிக்கலாம்.
ALSO READ | Budget 2022 விரைவில் வருகிறது LIC IPO: நிர்மலா சீதாராமன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR