LPG Cylinder Price In Chennai: பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரி விதித்து, அதன் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
அதை தொடர்ந்து, மத்திய அரசு தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீது பெரும் விலை குறைப்பு செய்துள்ளது. அரசின் முடிவிற்குப் பிறகு, தற்போது அனைத்து வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் 200 ரூபாய் குறைவாக கிடைக்கும். இந்த அறிவிப்பு, அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நேற்று அறிவிக்கப்பட்டது.
ரூ. 200 இல்லை ரூ. 400 தள்ளுபடி
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இதுவரை வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 1,118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் 918 ரூபாய் ஆக குறையும். இது அனைத்து தரப்பு மக்களுக்கானது என்றாலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 75 லட்சம் புதிய எல்பிஜி இணைப்புகள் உள்பட பலருக்கு அரசு ஏற்கெனவே 200 ரூபாய் தள்ளுபடியில் வழங்கி வருகிறது. எனவே, அவர்களுக்கு பழைய தள்ளுபடியுடன் இந்த 200 ரூபாயும் குறைக்கப்பட்டு, மொத்தம் 400 ரூபாய் தள்ளுபடி விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை அவர்கள் வாங்கலாம்.
மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டரை இப்படி முன்பதிவு செய்தால்... அதிரடி தள்ளுபடி கிடைக்கும்
அரசின் இந்த நடவடிக்கை அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் வரும் சட்டப்பேரவை தேர்தல் ஆயத்தமாகவே பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஆக. 29) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின், அனைத்து மக்களுக்கும் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்த முடிவிற்கு பிறகு சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை 1,118 ரூபாயில் இருந்து ரூ.903 ஆக குறைந்துள்ளது.
கூடுதல் பலன் யாருக்கு?
சிலிண்டர் விலையில் மத்திய அரசு ரூ.200 குறைத்த பிறகு, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மொத்தம் 400 ரூபாய் பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மத்திய அரசு அவர்களுக்கு ஏற்கனவே ரூ.200 மானியம் அளித்து வந்ததை பார்த்தோம். இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டரை இதுவரை 918 ரூபாய்க்கு பெற்று வந்தனர். ஆனால், தற்போது 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால், உஜ்வாலா பயனாளிகள் இனி 718 ரூபாய்க்கே சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கலாம். பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அனுராக் தாக்கூர் நேற்று கூறினார்.
75 லட்சம் குடும்பங்களுக்கு உஜ்வாலா இணைப்புகள் கிடைத்த பிறகு, அதன் புதிய பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும். மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு எல்பிஜி வழங்கப்படும் என்று ஆளும் பாஜக அரசு உறுதியளித்துள்ளது. அதே விலையில் ராஜஸ்தானிலும் எல்பிஜி சிலிண்டரை காங்கிரஸ் வழங்கும் என அறிவித்தது. இந்த இரு மாநிலங்களிலும் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். எனினும், இந்த முடிவு தேர்தலுக்கானது இல்லை எனக் கூறி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மறுத்துவிட்டார். இது ஓணம் மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு மோடி அரசு வழங்கிய பரிசு என்று கூறினார்.
மேலும் படிக்க | புதிய எல்பிஜி கேஸ் இணைப்பு வேண்டுமா? இந்த ஆவணங்கள் இல்லாமல் பெற முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ