Gold / Silver Rate Today: இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை, இன்றைய விலை நிலவரம் என்ன?

கடந்த சில மாதங்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 40,000-ஐத் தாண்டியது. எனினும் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் ஏராளமான ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 28, 2021, 12:31 PM IST
  • கடந்த சில மாதங்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 40,000-ஐத் தாண்டியது.
  • சென்னையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்துள்ளது.
  • தேசிய அளவிலும் தங்கத்தின் விலை புதன்கிழமை உயர்ந்தது.
Gold / Silver Rate Today: இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை, இன்றைய விலை நிலவரம் என்ன?  title=

கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். 

கடந்த சில மாதங்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 40,000-ஐத் தாண்டியது. எனினும் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் ஏராளமான ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது. 

சென்னையில் (Chennai), இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4,520-க்கு விற்கப்படுகின்றது. 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.36,160-க்கு விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் (Gold Rate) சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 24 காரட் தங்கம் ரூ.4,884 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,072 ஆகவும் விற்பனை ஆகிறது. 

ALSO READ: Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 500 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.40 ஆகவும் 1 கிலோ வெள்ளி விலை ரூ. 71,400 ஆகவும்  உள்ளது. 

தேசிய அளவிலும் தங்கத்தின் விலை புதன்கிழமை உயர்ந்தது. மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), ஆகஸ்ட் 28 தங்க காண்டிராக்டுகள் ஜூலை 28 அன்று காலை 0930 மணி அளவில் 10 கிராமுக்கு 0.18 சதவீதம் உயர்ந்து ரூ .47,657 ஆக இருந்தது. புதன்கிழமை வெள்ளி விலையும் தேசிய அளவில் அதிகரித்துள்ளது. வெள்ளி (Silver Rate) ஜூலை 28 அன்று 0.34 சதவீதம் உயர்ந்து கிலோ 66,281 ரூபாயாக உயர்ந்தது.

ALSO READ: Gold Rate Today: தங்கம் வாங்க இது நல்ல நேரமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News