EPFO: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புத்தாண்டு பரிசு, முழு விவரம் இதோ

EPFO தனது ரீஜனல் ஆபிஸில் இருந்து நவம்பர் 4, 2022 தேதி வெளியிட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது, அதன்படி அதில் கூறியப்படி தகுதியான சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பத்தை வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 2, 2023, 12:02 PM IST
  • உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவு.
  • மாத ஊதிய வரம்பை ரூ.6,500 - லிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தியது.
  • சம்பளத்தில் 8.33 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பாக வழங்கலாம்.
EPFO: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புத்தாண்டு பரிசு, முழு விவரம் இதோ title=

ஓய்வூதிய நிதிகளை நிர்வகிக்கும் அமைப்பான EPFO ​​(ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு), அதன் பிராந்திய அலுவலகத்திற்கு நவம்பர் 4, 2022 தேதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது, அதன்படி அதில் தகுதியான சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நவம்பர் 4, 2022 தேதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் பாரா 44(9) இல் உள்ள வழிமுறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செயல்படுத்துமாறு பிராந்திய அலுவலகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பு உயர்த்தப்பட்டது
முன்னதாக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் 2014ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை (திருத்தம்) உறுதி செய்தது. இபிஎஸ் திருத்தம் (ஆகஸ்ட் 2014) ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பை மாதம் ரூ.6,500லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தியது. கூடுதலாக, உறுப்பினர்கள் தங்கள் உண்மையான சம்பளத்தில் (வரம்பை மீறினால்) 8.33 சதவீதத்தை தங்கள் முதலாளிகளுடன் சேர்ந்து EPS க்கு பங்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதில், அனைத்து இபிஎஸ் உறுப்பினர்களும் திருத்தப்பட்ட திட்டத்தை தேர்வு செய்ய 6 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இபிஎஸ்-95ன் கீழ் அதிக ஓய்வூதியம் பெற தகுதியான சந்தாதாரர்களுக்கு 4 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

EPFO ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: 6 கோடி பேருக்கு நேரடி நன்மை

மேலும் படிக்க | 7th Pay Commission: அடிப்படை ஊதியத்தில் ஏற்றம், மாத சம்பளத்தில் பம்பர் உயர்வு 

PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எப்போது திரும்பப் பெறலாம்?

ஓய்வுக்குப் பிறகு, உங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, வேலையை விட்டு வெளியேறிய 2 மாதங்களுக்குப் பிறகும் உங்கள் EPF இன் முழுத் தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம். நீங்கள் உங்கள் வேலையை இழந்து 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், அத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் முழு PF தொகையையும் திரும்பப் பெறலாம். இருப்பினும், நீங்கள் பணிபுரியும் போது PF இல் இருந்து குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெற விரும்பினால், இதற்கு நீங்கள் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதேபோல் நீங்கள் விண்ணப்பித்த 3 முதல் 7 நாட்களுக்குள் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் பெறப்படும்.

மேலும் படிக்க | Business Idea: வெறும் ரூ.5,000 முதலீட்டில் பெரிய அளவில் சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News