மும்பையில் லால்பாக்சா ராஜா இல்லாத விநாயகர் சதுர்த்தி... 86 ஆண்டுகளில் முதல் முறை..!!!

விநாயகர் சதுர்த்தி என்றாலே நினைவுக்கு வருவது மும்பை தான். நாடெங்கும் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டாலும், மும்பையில் தான் அதிக பட்ச உற்சாகம் களை கட்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2020, 02:11 PM IST
  • மும்பையில் நடக்கும் கணேச சதுர்த்தி ஊர்வலத்தில், கணபதி பப்பா மோரியா கோஷம் விண்ணை பிளக்கும்.
  • ஆண்டு தோறும் மும்பையில், சுமார் 2700 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்படும்.
  • லால்பாக்சா ராஜா எனப்படும் பிரம்மாண்ட விநாயகர் சிலை 86 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த வருடம் இருக்காது.
மும்பையில் லால்பாக்சா ராஜா இல்லாத விநாயகர் சதுர்த்தி... 86 ஆண்டுகளில் முதல் முறை..!!! title=

விநாயகர் சதுர்த்தி என்றாலே நினைவுக்கு வருவது மும்பை தான். நாடெங்கும் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டாலும், மும்பையில் தான் அதிக பட்ச உற்சாகம் களை கட்டும். 

மும்பையில் நடக்கும் கணேச சதுர்த்தி ஊர்வலத்தில், கணபதி பப்பா மோரியா கோஷம் விண்ணை பிளக்கும். ஆனால், பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து, வழிபடும் மும்பையிலேயே, கொரோனாவால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

மத்திய மாநில் அரசுகள் பல்வேறு கெடுபிடிகளை பிறப்பித்து வருகின்றன. தொழில் துறைகள் தளர்வுகல் அறிவிக்கப்பட்டாலும் கோவில்கள் உட்பட பெரிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 
இந்த சூழ்நிலையில், தொற்று பரவலை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் மாநில அரசுகள் கட்டுபாடுகளை விதித்துள்ளன. 
பொது இடங்களில் சிலை வைத்து வழிபட சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில், நான்கு அடி உயரத்துக்கு மேல் சிலை வைக்க கூடாது என்பது உட்பட பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 ஆண்டு தோறும் மும்பையில், சுமார் 2700 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்படும். ஆனால், இந்த ஆண்டு, வெறும் 84 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்கவும் கரைக்காவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில், சிலை கரைப்பு ஊர்வலத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள். 

ஆனால், இந்த ஆண்டு, இவ்வளவு கோலாகலமாக நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் போய் விட்டது. வீடுகளில் வைத்து வழிபடப்படும் சிலை 2 அடி உயரத்திற்கு மேல் இருக்க கூடாது என அரசு கூறியுள்ளது.
 
ALSO READ | சீனாவிலிருந்து இந்தியவிற்கு இடம் பெயர தாயாராகும் 24 மொபைல் நிறுவனங்கள்...!!!

இவ்வாறு பொது இடங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு, பிரம்மாண்ட தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளையும் கரைக்க உள்ளோம் என விநாயர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது போல் பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகளில், அதன் வளாகத்திலேயே தொட்டிகள் அமைத்து அதில், சிலைகளை கரைக்குமாறு குடியிருப்பு வாசிகளுக்கு அறிவிறுத்தியுள்ளதாக, விநாயகர் சதுர்ச்சி அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது நிறுவப்படும், லால்பாக்சா ராஜா எனப்படும்  பிரம்மாண்ட சிலை 86 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த வருடம் இருக்காது.

ஒவொவொரு வருடமும் இந்த லாக்பாக்சா ராஜா எனப்படும் இந்த சிலையை தரிசிக்க லட்சக்கணக்கானோர் 24 மேல் காத்திருத்து தரிசிப்பார்கள்.

இது தவிர பொருளாதார  ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சிலைகளை வடிக்கும் கலைஞர்கள் வேலையை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கலைஞர்கள், விநாயகர் சதுர்த்தி, நவராத்ரி, துர்கா பூஜை போன்ற சந்தர்ப்பங்களில் ஈட்டும் பணத்தை வைத்து தான் வருடம் முழுவது காலம் தள்ளுகிறார்கள். அவர் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே போல் பந்தல்களை அமைக்கும் பணியில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் வேலை இல்லை.  

 ALSO READ | கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!!

Trending News