பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய மூன்று பெரிய சமூக ஊடக தளங்களை ஒருங்கிணைக்க தயாராகி வருகிறார்..!
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்குக்கான சாட் அமைப்புகள் இதுவரை தனித் தனியாகவே இருந்துவந்தன. இப்போது ஃபேஸ்புக் (FaceBook), இவை இரண்டையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்த முதல் தகவல் வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலருக்கும் "இனி இன்ஸ்டாகிராமில் புதிய முறையில் சாட் செய்யலாம்" என்ற தகவல் வந்தது.
அப்டேட் செய்து பார்த்தால் இன்ஸ்டாகிராமில் இருக்கும் சாட் அமைப்பை மொத்தமாக நீக்கி ஃபேஸ்புக் மெசேஞ்ஜரை சேர்த்திருக்கிறார்கள். ஆம், மெசேஞ்ஜரில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இனி இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பவும் பயன்படுத்தலாம். பேஸ்புக்கின் தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய மூன்று பெரிய சமூக ஊடக தளங்களை ஒருங்கிணைக்க தயாராகி வருகிறார். தற்போது அவர்கள் அமெரிக்காவில் இந்த செயல்முறையை இயக்குகிறார்கள்.
ALSO READ | அட்டகாசமான இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்!!
இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இல்லாத ஃபேஸ்புக் பயனர்களுக்கும் இதிலிருந்து மெசேஜ் அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய மூன்றிலிருந்தும் அந்த ஆப்களுக்குள் மெசேஜ் செய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனப் பல காலமாக ஃபேஸ்புக் திட்டமிட்டுவருகிறது.
இதன் மூலம் மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்பிள் iMessage சேவையைப் பின்னுக்கு தள்ளமுடியும் என்பதே ஃபேஸ்புக்கின் வியூகம். இதன்படி விரைவில் நாம் அனைவரும் வாட்ஸ்அப்பிலிருந்து ஃபேஸ்புக் நண்பர்களுக்கும், இன்ஸ்டா பாலோயர்ஸுடனும் சாட் செய்யலாம். மொத்த அமைப்பும் end-to-end என கிரிப்ஷனுடன் இருக்க வேண்டும் என்பதே மார்க் சக்கர்பெர்க்கின் திட்டம். இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் அரட்டை இன்னும் வண்ணமயமாகத் தெரிகிறது. பேஸ்புக் தற்போது இன்ஸ்டாகிராம்-மெசஞ்சர் அமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.