Refurbished Smartphone: ₹2899 என்ற விலையில் வாங்க அற்புத வாய்ப்பு

சிறப்பான அம்சங்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை (Refurbished Smartphone) ரூ .2899 என்ற விலையில் ஜூம்ஷாப்பில் வாங்கலாம். இது குறிப்பிட்ட காலத்திற்கான சலுகையாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2021, 10:40 AM IST
  • ZOOMSHOP என்பது சான்றளிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மொபைல்கள் விற்பனை செய்வதற்கான ஆன்லைன் சந்தையாகும்.
  • இந்த இணையதளத்தில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் கடுமையான தர சோதனைகளுக்கு உட்படுகின்றன.
Refurbished Smartphone: ₹2899 என்ற விலையில் வாங்க அற்புத வாய்ப்பு   title=

பட்ஜெட் விலையில், சிறப்பு அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் கிடைத்தால் யாருக்கு தான் வாங்க விருப்பம் இருக்காது. அதுவும் கொரோனா காலத்தில், ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது.

மிக குறைந்த விலையில், நல்ல ஸ்மார்போன்களை வாங்க இப்போது ஒரு அருமையான வாய்ப்பு மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களின் புதுப்பிக்கப்பட்ட மாடல்களை ஜூம்ஷாப்பில் (ZOOMSHOP) வெறும் ரூ .2899 க்கு வாங்கலாம். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான சலுகையாகும். ஸ்டாக் தீரும் வரை மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ZOOMSHOP என்பது சான்றளிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மொபைல்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற உதிரி பாகங்களை விற்பனை செய்வதற்கான ஆன்லைன் சந்தையாகும். இந்த இணையதளத்தில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் கடுமையான தர சோதனைகளுக்கு உட்படுகின்றன மற்றும் தொலைபேசியின் தரத்தை சரிபார்க்க QUTrust என்ற மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

ஜூம்ஷாப்பின் இந்த விற்பனையில், அனைத்து புகழ்பெற்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கீபேட் தொலைபேசிகள் கிடைக்கின்றன. சலுகை விற்பனையில் கிடைக்கும் பிராண்டுகளில் Oppo, Vivo, Realme, Ice Cream, Samsung மற்றும் UNITY U310 மற்றும் Redmi மற்றும்  Klassic KL-102  ஆகியவை அடங்கும். ஜூம்ஷாப் அதன் விற்பனையாளர்கள் இடமிருந்து ஏராளமான பழைய தொலைபேசிகளை வாங்கி, அதனை முழுமையாக புதுப்பித்து  வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் விற்கிறது. எனவே இந்த சலுகை முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை  என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ALSO READ: Airtel Prepaid Plan: ரூ.349-க்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா என அசர வைக்கிறது!!

புதுப்பிக்கப்பட்ட போன்கள் என்றால் என்ன?

பல்வேறு காரணங்களுக்காக விற்பனையாளரிடம் திருப்பி அனுப்பப்படும் பொருட்கள், குறிப்பாக மின்னணுவியல் அல்லது மின் பொருட்கள், மீண்டும் சோதனை செய்யப்பட்டு, முழுமையாக பழுதுகள் நீக்கப்பட்டு, முழுமையாக  தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. இது புதுப்பித்தல் (Refurbished) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சான்றளிக்கப்பட்ட செகண்ட ஹாண்ட் கார் வாங்குவது போன்றது. 

கையிருப்பில்லாததால் உங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போன்  ஜூம்ஷாப் தளத்தில் இல்லை எனில், ஜூம்ஷாப் உங்களுக்கு இரண்டு சலுகைகளை வழங்கும்:

1. நீங்கள் சிறப்பு அம்சம் கொண்ட வேறு தொலைபேசி வகைகளை தேர்ந்தெடுக்கலாம்.
2. அந்த தொலைபேசியிலும் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், ரூ .2899 க்கான கூப்பன் உங்களுக்கு வழங்கப்படும். அதை பயன்படுத்தி  வேறு பொருட்கள் வாங்கலாம்.

இந்த சலுகையின் கீழ், அனைத்து ஸ்மார்ட்போன்களும் First come, First serve அடிப்படையில் விற்கப்படுகின்றன. விரைவில் ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்க. ஆர்டர் செய்வதற்கு முன்பு ஒரு முறை ZOOMSHOP தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஷிப்பிங் பாலிஸியை படிக்கவும்.

ALSO READ: Airtel recharge: ஏர்டெல் ரூ.456 புதிய திட்டம் அறிமுகம்: என்னென்ன நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News