EPFO:58 வயதுக்கு முன்னரே பென்ஷன் வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

EPFO: 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சேவைக் காலத்தை முடித்த ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற பிறகு அதாவது 58 வயதிலிருந்து இபிஎஃப்ஓ-ல் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2023, 06:25 PM IST
  • நீங்கள் 10 வருட சேவையை முடித்து, உங்கள் வயது 50 வயதுக்கு குறைவாக இருந்தால், நீங்கள் ஓய்வூதியம் பெற முடியாது.
  • உங்கள் சேவைக் காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.
  • அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன.
EPFO:58 வயதுக்கு முன்னரே பென்ஷன் வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? title=

இபிஎஃப்ஓ -இன் விதிகளின்படி, இபிஎஃப்ஓ -​​இல் தங்கள் பங்களிப்பை வழங்கும் ஊழியர்கள், தங்கள் பணியில் 10 ஆண்டுகள் முடித்த பின்னர், ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவராவார்கள். சேவையின் மொத்த காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், ஓய்வூதியத்திற்காக டெபாசிட் செய்யப்பட்ட தொகையை இடையில் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். ஆனால் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சேவைக் காலத்தை முடித்த ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற பிறகு அதாவது 58 வயதிலிருந்து இபிஎஃப்ஓ-ல் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் ஓய்வூதியத்தின் அளவு தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு நபர் 58 ஆண்டுகளுக்கு முன் ஓய்வூதியம் பெற விரும்பினால், இபிஎஃப்ஓ -வில் 'எர்ளி பென்ஷன்' (Early Pension) என்ற விருப்பமும் உள்ளது. ஆனால் அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு குறைக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எர்ளி பென்ஷன் கிளெய்மின் விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

Early Pension: இதன் விதிகள் என்ன

நீங்கள் 10 வருட சேவையை முடித்திருந்து, உங்கள் வயது 50 முதல் 58 வயதுக்குள் இருந்தால், நீங்கள் Early Pension -ஐப் பெற முடியும். ஆனால் இதில் உங்களுக்கு குறைவான ஓய்வூதியம் கிடைக்கும். 58 வயதிற்கு முன் நீங்கள் பணத்தை எடுத்தால், ஒவ்வொரு ஆண்டும் 4% என்ற விகிதத்தில் ஓய்வூதியம் குறைக்கப்படும். இபிஎஃப்ஓ உறுப்பினர் 56 வயதில் குறைக்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியத்தை திரும்பப் பெற முடிவு செய்தால், அவர் அடிப்படை ஓய்வூதியத் தொகையில் 92% (100% - 2×4) பெறுவார். எர்ளி பென்ஷனைப் பெற, ஒருங்கிணைந்த க்ளெயிம் படிவத்தை (Composite Claim Form) பூர்த்தி செய்து, எர்ளி பென்ஷனுக்கான படிவம் மற்றும் 10D விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | EPFO Rules: திருமணத்துக்கு பிஎப் தொகையை எடுக்கிறீர்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

50 வயதுக்கு கீழ் இருந்தால்

நீங்கள் 10 வருட சேவையை முடித்து, உங்கள் வயது 50 வயதுக்கு குறைவாக இருந்தால், நீங்கள் ஓய்வூதியம் பெற முடியாது. அத்தகைய சூழ்நிலையில், வேலையை விட்டு வெளியேறிய பிறகு, நீங்கள் இபிஎஃப் -இல் டெபாசிட் செய்யப்பட்ட நிதியை மட்டுமே பெறுவீர்கள். 58 வயது முதல் ஓய்வூதியம் கிடைக்கும்.

10 வருடங்களுக்கும் குறைவான சேவைக் காலம் இருந்தால்...

உங்கள் சேவைக் காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. முதலில்- நீங்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்றால், பிஎஃப் தொகையுடன் ஓய்வூதியத் தொகையையும் திரும்பப் பெறலாம். இரண்டாவது விருப்பம், எதிர்காலத்தில் மீண்டும் வேலையில் சேர வேண்டும் என நினைத்தால், பென்ஷன் திட்டச் சான்றிதழை எடுத்துக் கொள்ளலாம். 

இதுபோன்ற சூழ்நிலையில், எப்போது புதிய வேலையில் சேருகிறீர்களோ, அப்போது இந்தச் சான்றிதழ் மூலம், முந்தைய ஓய்வூதியக் கணக்கை புதிய வேலையில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் முந்தைய வேலையில் 10 வருட காலம் முடிவடையவில்லை என்றால், அடுத்த வேலையில் அதை முடித்து 58 வயதில் ஓய்வூதியம் பெறலாம்.
 
இபிஎஃப்ஓ

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃபோ), உலகின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) எனப்படும் நலன்புரி திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளது. இதில் முதலீடுகள், வரவுகள் மற்றும் இபிஎஃப் வித்டிராயல்கள் தொடர்பான வரி விதிமுறைகள் குறித்து ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | EPFO கொடுத்த காலவகாசம் - ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News