ஹோட்டல் சமையல் ஆறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை குளியல் தொட்டியாய் மாற்றிய ஊழியர்!!
புளோரிடாவில் உள்ள ஒருவர் ஹோட்டலில் குளிக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியான பிறகு அவரின் வேலையும் பறிபோன வேடிக்கையான சம்பவனம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் துரித உணவு விடுதியான செயின் வெண்டிஸ் என்ற ஹோட்டலில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் சமையல் அறையில் உள்ள பெரிய சிங்கை குளியல் தொட்டி போன்று பயன்படுத்தியுள்ளார் என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. அதுமட்டும் இன்றி அந்த வீடியோ இணையதளத்தில் விரலாக பரவியுள்ளது.
சிங்கில் சோப்பு கலந்த தண்ணீர்ல் அவர் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து சிங்கில் இறங்கி குளிக்கத் தொடங்குகிறார். மற்ற ஊழியர்கள் சிரித்தபடி இதை வீடியோ எடுத்தனர். அதுமட்டும் இன்றி, அவர் குளியல் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை 1மில்லியன் பார்வையாளர்கள் பகிர்ந்து கோபமான வகையில் தங்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர். “மக்கள் ஏன் இத்தனை முட்டாளாக செயல்படுகின்றனர்..?” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் “இவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட வேண்டும்” என்றும் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த விடுதியின் உரிமையாளர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், இந்த சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது. நாங்கள் இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்.இந்த உணவகத்தில் இனி இந்த நபர் வேலை செய்யமுடியாது. எங்கள் உணவகக் குழு தரத்திற்கும் சுத்தத்தையும் கடைபிடிக்க கூடுதல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.