ரிமோட் மூலம் டிவியை அணைக்கும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!

பெரும்பாலானோருக்கு டிவியை ரிமோட்டால் அணைத்து விட்டு ஸ்டாண்ட்-பை மோடில் வைத்து விடும் பழக்கம் உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 13, 2022, 07:55 PM IST
ரிமோட் மூலம் டிவியை அணைக்கும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்..!! title=

இன்று டிவி இல்லாத வீடு இல்லை. அதே சமயம் டிவினால் ஏற்படும் மின்சாரக் கட்டணமும் மாதத்தின் அத்தியாவசியச் செலவுகளில் முக்கியச் செலவு. இந்தியாவில் சுமார் 70 சதவீதம் பேர் மெயின் சுவிட்சை அணைக்காமல் ரிமோட் மூலம் மட்டுமே டிவியை அணைக்கிறார்கள். டிவியை ஸ்டாண்ட்-பை மோடில் வைப்பது உங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்கிறது. ஆனால் சிறிய விஷயங்களை கூட கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் மின்சாரத்தையும் பணத்தையும் சேமிக்க முடியும். 

உங்கள் வீட்டில் உள்ள கேஜெட்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை சரியாக அணைக்க வேண்டும், இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கேஜெட்களை ஸ்டாண்ட்-பை மோட், ஸ்லீப் மோடில் வைக்காமல், அதன் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். ஒரு கேஜெட்டை ஸ்டான்ட் அபை மோடில் வைக்கும் போது, ​​அது குறைந்த அளவில் தொடர்ந்து இயங்குவதற்கு மின் சக்தி சிறிது பயன்படுத்துகிறது.

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்

எடுத்துக்காட்டாக,தொலைக்காட்சியை பெயின் சுவிட்சை அணைக்காமல் ரிமோட்டில் அணைக்கும் போது என்பது ரிமோட் கண்ட்ரோலில் இருந்து சிக்னல்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பதற்காக. அதனை உள் வாங்க டிவி தொடர்ந்து இயக்க நிலையில் இருக்கும். அதனால் உங்கள் டிவியை ஸ்டாண்ட் பை மோடில் வைத்தால், அது உங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்கும்.

ஸ்டாண்ட் பை மோடில்  இருக்கும் போது, உங்கள் டிவி பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு, அளவு, மாடல் மற்றும் எவ்வளவு சக்திக்கு ஏற்றது என்பதைப் பொறுத்தது. மின்சாரத்தில் இயங்கும் அனைத்து கேஜெட்களும் அதன்  செயல்பாட்டிற்கு ஏற்ப மின்சாரம் எடுத்துக் கொள்கிறது. இது பொதுவாக வாட்ஸ் (W) அல்லது கிலோவாட்களில் (kW) கொடுக்கப்படுகிறது.

பொதுவாக டிவி ஸ்டாண்ட் பை  நிலையில் இருக்கும் போது ஒரு மணி நேரத்தில் 10 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்த கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்கள் வசிக்கும் இடம் மற்றும் உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டைப் பொறுத்து உங்கள் மின்சார கட்டணங்கள் பெரிதும் மாறுபடும். உங்கள் கேஜெட்டின் மின்ஆற்றல் மதிப்பீடு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அதற்கு ஏற்ப மின்சார செலவு  இருக்கும்.

டிவியை ஸ்டாண்ட் பை  நிலையில் வைக்கும் பழக்கம் உங்கள் மின் கட்டணத்தை 100 ரூபாய் வரை அதிகரிக்கிறது. அதாவது, ரிமோட் மூலம் டிவியை மட்டும் அணைப்பதால், ஆண்டுக்கு 1200 ரூபாய் வரை கூடுதலாக மின்கட்டணம் செலுத்துகிறீர்கள். எனவே, மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றால், இன்றிலிருந்தே மெயின் சுவிட்சை அணைப்பதன் மூலம் டிவியை அணைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News