சென்னை மெட்ரோ பயணிகளுக்கு கேப், ஷேர் ஆட்டோ வசதி..!

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோ மற்றும் கேப் வசதியை செய்துள்ளது சென்னை மெட்ரோ நிர்வாகம்! 

Last Updated : Aug 11, 2018, 06:03 PM IST
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு கேப், ஷேர் ஆட்டோ வசதி..! title=

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோ மற்றும் கேப் வசதியை செய்துள்ளது சென்னை மெட்ரோ நிர்வாகம்! 

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் தங்களின் பயணிக்களுக்கு தேவையான பல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறது. சென்னை டி.எம்.எஸ் முதல் விமான நிலையம் வரையிலும், மற்றொரு பாதை, விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக ஒரு பாதையும் செயல்பட்டுவருகிறது. 

மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதில், ஒரு பகுதியாக, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதற்கு வசதியாக ஷேர் ஆட்டோ, கேப் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இத்திட்டம் குறித்து, சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, டி.எம்.எஸ், வடபழனி ஆகிய 5 மெட்ரோ நிறுத்தங்களில் கேப் வசதி இருக்கும். அசோக் நகர், ஆலந்தூர் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, செண்ட் தாமஸ் மவுண்ட, திருமங்கலம் ஆகிய 8 நிறுத்தங்களில் சேர் ஆட்டோ சேவை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேப் பயன்படுத்துவதற்கு 15 ரூபாய் கட்டணமாகவும், சேர் ஆட்டோவுக்கு 10 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
கோயம் பேட்டிலிருந்து செல்லும் கேப், வி.ஆர்.மால், திருமங்கலம், பாடி பாலம், சரவணா ஸ்டோர்ஸ் வரை செல்லும். ஆலந்தூரிலிருந்து செல்லும் கேப், தாமரை ஐ.டி பார்க், சிபேட் தலைமை அலுவலகம், கிண்டி பேருந்து நிலையம் வரை செல்லும். அண்ணா நகர் கிழக்கிலிருந்து செல்லும் கேப், மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்லும். 

டி.எம்.எஸ்-லிருந்து செல்லும் கேப், செம்மொழி பூங்கா, ஆழ்வார்பேட்டை, போஸ்க் அலுவலகம் ஆகிய இடங்களுக்குச் செல்லும். வடபழனியிலிருந்து செல்லும் கேப், முருகன் கோயில், மேனகா கார்ட்ஸ், சிம்ஸ் மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் செல்வதாகவும் தெரிவித்துள்ளது. 

அசோக்நகரிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ, சி.பி.டபிள்யூ.டி ஊழியர்கள் குடியிருப்பு, அண்ணா நகர் சாலை ஆகிய இடங்களுக்குச் செல்லும். ஆலந்தூரிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ, பட் சாலை, சென்னை வர்த்தக மையம், மியாட் மருத்துவமனை, செயிண்ட் பேட்ரிக் சர்ச் ஆகிய இடங்களுக்குச் செல்லும். ஈக்காட்டுத் தாங்கலிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ, கிண்டி தொழிற்சாலை பகுதி, கிண்டி பேருந்து நிலையம், திரு.வி.க தொழிற்சாலை பகுதிகளுக்குச் செல்லும். 

மேலும், கிண்டியிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ, ரேஸ் கோர்ஸ், பீனிக்ஸ் மால், விஜயநகர் ஜங்சன், வேளச்சேரி பகுதிகளுக்குச் செல்லும். கோயம்பேட்டிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ பாடி குப்பம், முகப்பேர் தொழிற்சாலை, ஜே.ஜே.நகர், முகப்பேர் மேற்கு, எம்.ஜி.ஆர் கல்லூரி, டேனியல் தாமஸ் பள்ளி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும். செயிண்ட் தாமஸ் மவுண்ட்டிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ மேடவாக்கம் பிரதான சாலையிலுள்ள பகுதிகளுக்குச் செல்லும். 

திருமங்கலத்திலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்குச் செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது! 

 

Trending News