PF பணத்தை ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி? எளிய வழிகள்!

ஒரு ஊழியரின் PF பணத்தை ஆன்லைன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்துகொண்டே சுலபமாக பெற்றுக்கொள்ள முடியும்.  

Written by - RK Spark | Last Updated : Jun 24, 2022, 05:18 PM IST
  • ஊழியர்கள் அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பிஎஃப் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
  • ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
  • அதற்கு அரசு சில வரம்புகளை வகுத்துள்ளது.
PF பணத்தை ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி? எளிய வழிகள்! title=

இபிஎஃப் என்பது ஒரு ஊழியரின் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்திற்கு பயன்படும் வாழ்நாள் சேமிப்புத் தொகையாகும்.  இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) டெபாசிட் செய்யப்பட்ட ஊழியரின் மாத சம்பளத்தில் 12 சதவீதத்தை கொண்டுள்ளது.  இந்த நிதியில் ஊழியர்களுக்கு முதலாளியும் ஒரு பங்களிப்பை வழங்குகிறார், தற்போது ஊழியர்கள் ஆன்லைன் வாயிலாக, அதாவது இபிஎஃப்ஓ-ன் இ-சேவ் போர்டல் மூலமாக சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | Home Loan-ஐ விரைவில் அடைக்க: ஃபிக்ஸ்ட் வட்டி விகிதம், ஃப்ளோடிங்க் விகிதம்? எது சிறந்தது?

பொதுவாக ஊழியர்கள் அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பிஎஃப் தொகையை பெற்றுக்கொள்ளலாம், அதேசமயம் இடையில் அதாவது ஓய்வு பெறுவதற்கு முன்பு பணம் தேவைப்படுபவர்கள் சிலவற்றை பூர்த்தி செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.  பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்ய ஊழியரின் ஆதார் அட்டையை யூஏஎன் உடன் இணைப்பது கட்டாயமாகும்.  இதனை இபிஎஃப்ஓ இணையதளம் மூலமாகவோ அல்லது UMANG என்கிற மொபைல் ஆப் மூலமாகவோ ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.  பிஎஃப் பணத்தை பெறுவதற்கு முன்னர் கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்திருக்க வேண்டும், இதற்கு பான் கார்டு தேவை.  தற்போது பின்வரும் படிநிலைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில இருந்துகொண்டே தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

- https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-ல் யூஏஎன் போர்டலை பார்க்கவும்.

- உங்களது  யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக் இன் செய்து, சரியான கேப்ட்சாவை பதிவிடவும்.

- அடுத்ததாக ஆன்லைன் சர்விஸ் என்பதற்கு சென்று கீழே மெனுவில் உள்ள க்ளைம் (படிவம்-31, 19 & 10சி) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

- பின்னர் ஸ்க்ரீனில் வங்கி கணக்கு எண்ணை உள்ளிட்டு வெரிஃபை' என்பதை க்ளிக் செய்யவும்.

- இப்போ எஸ் என்பதை க்ளிக் செய்யவும்.

- பின்னர் 'ப்ரொசீட் ஃபார் ஆன்லைன் க்ளைம்' என்பதை க்ளிக் செய்யவும்.

- இப்போது க்ளைம் விண்ணப்பத்தில் 'நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

- இப்போது தொகையை பெற 'பிஎஃப் அட்வான்ஸ் ( படிவம் 31) என்பதை தேர்ந்தெடுத்து, முன்பணம் எடுப்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

- அடுத்து டாக்குமென்டுகளை ஸ்கேன் செய்துவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

- உங்களது கோரிக்கையை முதலாளி ஏற்றபின் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேரும், பணம் கணக்கில் வருவதற்கு 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு EPFO-ன் அதிரடி அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News