ஆரோக்கியம் தரும் மந்திரங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்

மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி  பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து தோன்றியவர், ஆயுர்வேத மருத்துவ முறையின் கடவுளாக தன்வந்திரி வணங்கப்படுகிறார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 1, 2021, 06:47 AM IST
  • நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை
  • மருத்துவத்தின் நாயகர் தன்வந்திரி
  • தன்வந்திரியை வணங்கி நோயற்ற வாழ்வை வாழலாம்
ஆரோக்கியம் தரும் மந்திரங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்   title=

நம்பிக்கை இருந்தால் அதுவே யானை பலம் தரும். எந்தவொரு சிக்கலாக இருந்தாலும் இறைவனையே சரணடைபவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் தீர்வு கிடைத்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.  

மருத்துவம், அறிவியலால் முடியாத பல மருத்துவ அற்புதங்களை பிரார்த்தனைகள் நிறைவேற்றியுள்ளன. இது மதங்களை தாண்டிய நம்பிக்கை என்பதை யாருமே மறுக்க உடியாது. மருத்துவர்கள் கை விரித்தாலும் நாம் நம்பும் கடவுள் நம்மைக் கைவிடுவது இல்லை. மருத்துவம் கைவிட்ட நிலையில் நம்முடைய கடைசி நம்பிக்கையாக ஆன்மிகம் இருக்கிறது.

ஆயுர்வேத மருத்துவ முறையின் கடவுளாக தன்வந்திரி வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து தோன்றியவர். பாற்கடலை கடைந்தபோது முதலில் ஆலகால விஷம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கையில் அமிர்த கலசத்தை ஏந்திய தன்வந்திரி வெளிவந்தார்.

Also Read | திருப்பதி பெருமாள் ஏன் குபேரனுக்கு வட்டி மட்டும் கட்டுகிறார்? 

தினமும் தன்வந்திரி மந்திரத்தை உச்சரித்து, அவரை வணங்கி வந்தால், நோய் அச்சம் நம்மை விட்டு விலகும். அச்சங்களும், நோய்கள் விலகி, ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெருகும். அதற்கு சில சுலபமான மந்திரங்கள் உள்ளன.

மந்திரம்: ஓம் நமோ பகவதே! 
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய!
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம!

என்பது தான் தன்வந்திரியின் அருளை பெற்று நோயற்ற வாழ்வைத் தரும் மந்திரம்.  சரி, மந்திரத்தின் பொருளை தெரிந்துக் கொண்டு அதை உச்சரித்தால் பலன் முழுமையாக கைகூடும்.

Also Read | திருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியம்

கையில் அமிர்த கலசத்தை ஏந்தியிருக்கும் வாசுதேவனே! தன்வந்திரி பகவானே! எல்லா நோய்களுக்கும் மருந்தாக, நோய்களைத் தீர்ப்பவராக இருக்குக்ம் தன்வந்திரி பெருமாளே உன்னை வணங்குகிறோம்!!!

மிகவும் ஆற்றல் மிக்க இந்த மந்திரத்தை தினசரி 108 முறை இதை சொனால் கை மேல் பலன் கிடைக்கும். 

இதைத்தவிர மஹா மிருத்யுஞ்ஜய மந்திரமும் நல்ல பலனளிக்கக்கூடியது.  

மிருத்யுஞ்ஜய மந்திரம் சிவபெருமானுக்கு உரியதாகும். வாழ்க்கைக்கு அச்சம் ஏற்படும் எல்லா சூழலிலும் இந்த மந்திரத்தை சொல்லி தைரியம் பெறலாம். பொதுவாக உயிர் பயம் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமான மந்திரம் இது.  

Also Read | திருப்பதி தெய்வத்தின் பக்தி உலா

மார்கண்டேயன் இந்த மந்திரத்தை கூறிதான் எமனின் பிடியிலிருந்து தப்பினான் என்று கூறப்படுவது உண்டு. கஷ்ட காலத்தில் நம்பிக்கையோடு இந்த மந்திரத்தைக் கூறி அதிசயமான பலன்களைப் பெறலாம்.

மந்திரம்: ஓம் த்ரயம்பகம் யஜாமஹே 
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் 
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!!

மிருத்யுஞ்சய மந்திரத்தின் பொருளை அறிந்து அதை உச்சரித்தால் பலன் முழுமையாகக் கிடைக்கும். 

இயற்கையாகவே நறுமணம் கொண்டவரே, அடியவர்களுக்கு கருணையோடு உணவூட்டி வளர்ப்பவரே! சிவ பெருமானே, பழுத்த வெள்ளரிப் பழம், அதன் கொடிக்கு எந்த வலியுமின்றி விடுபடும்போதே, தனக்கும் எந்தவித வலியும் இன்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக.
இந்த சுலபமான மந்திரங்களை தினசரி சொல்லி நோயற்ற வாழ்வை வாழ்வோம்…

Also Read | Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News