இஸ்லாமிய நாடுகளில் மதச்சட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது உலகம் அறிந்ததே. காலம் மாறினாலும், நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டாலும் மதச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர எந்தவொரு இஸ்லாமிய நாடும் தயக்கம் காட்டும்.
தற்போது ஐக்கிய அரசு அமீரகம் நவீன காலத்திற்கு ஏற்ப என்று சொல்லும் விதத்தில் இல்லையென்றாலும் மிகவும் புராதனமான இஸ்லாமிய சட்டங்களில் இருந்து சற்று விலக முடிவு செய்திருக்கிறது.
தனிநபர் சுதந்திரம் தொடர்பான சட்டங்களில் நவம்பர் ஏழாம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகம் சீர்திருத்தங்களை அறிவித்தது. அந்நாட்டு அரசின் எமிரேட்ஸ் நியூஸ் ஏஜென்ஸி (Emirates News Agency) இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. மது தொடர்பான கட்டுப்பாடுகள், திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து இருப்பது, ஆணவக் கொலைகள், திருமண விவாகரத்து, வாரிசு உரிமை தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என Emirates News Agencyஎன்என்று தெரிய வந்துள்ளது.
இஸ்லாம் சொல்லும் வேதங்களை மீறுவது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க்கும் பெண்களை தாக்கி, கொடுமைப்படுத்தும் ஆண்களுக்கு இதுவரை மிகக் குறைவான அளவே தண்டனை இருந்தது. தற்போது இதுபோன்ற குற்றங்கள், வன்முறைகள் அனைத்தும் சமமாக பாவிக்கப்படும்.
திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது சட்டப்படி செல்லும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இது மிகப் பெரிய சீர்திருத்தமாக இருக்கும். திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதும், எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதும் குற்றம் என்று சொல்லப்பட்டது. தற்போது, இந்த சீர்திருத்தம் இஸ்லாமிய நாட்டு சீர்திருத்தத்தின் மைல்கல் என்றே சொல்லலாம்.
இதுவரை அமீரகத்தைத் தவிர பிற நாடுகளில் திருமணம் செய்துக் கொண்டிருந்தால், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டப்படி விவாகரத்து பெறமுடியாது என்ற சட்டம் தற்போது திருத்தப்பட்டு, சட்டரீதியாக எந்த நாட்டில் திருமணம் செய்துக் கொண்டவர்களாக இருந்தாலும், அமீரகத்தில் சட்டரீதியில் விவாகரத்து பெறலாம்.
சொத்து மற்றும் வாரிசுரிமை விவகாரத்தில் ஷரியா சட்டப்படி உள்ளூர் நீதிமன்றங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துகள் பாகப்பிரிவினை செய்யலாம் என்பதும் மிகப்பெரிய மாற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு மாற்றமாக, சட்ட விவகாரங்களில் அரபு மொழி தெரியாத பிரதிகள் மற்றும் சாட்சிகளுக்கு இனிமேல் மொழிப்பெயர்ப்பாளர்களை நீதிமன்றங்கள் வழங்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR