Open Marriage Relationship: திருமண உறவு என்பது மனிதர்களிடம் ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவங்களையும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு வழக்கத்தை பெற்று தற்போது வரை நீடித்திருக்கும் ஒரு அமைப்பாக உள்ளது. குடும்ப உறவை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த திருமண உறவு உண்டாகக்ப்படுகிறது. திருமணம் என்பதே இரு மனங்கள் ஒன்றிணைவது என்பது சார்ந்த சிந்தனையொட்டி கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும்.
முன்பெல்லாம் திருமண உறவு என்பது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், பெண்கள் அவர்களுக்கு அடிபணிந்து போகிறவர்களாகவும் இருப்பதை ஊக்கப்படுத்தியது. ஆனால், இது இப்போது திருமண உறவில் ஆண் - பெண் இருவரும் சமம், இருவரின் கருத்துகளும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உரையாடல் என்பது அதிகமாகியிருக்கிறது. இது ஆரோக்கியமான மற்றும் அவசியமான மாற்றமாகும்.
அதேபோல், இந்த காலகட்டத்திலேயே Open Marriage என்பதும் பலராலும் விரும்பப்படும் ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில், Open Marriage என்றால் என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து இதில் காணலாம்.
மேலும் படிக்க | டேட்டிங் ஆப் மூலம் காதலியை தேடுகிறீர்களா? இந்த 5 பிரச்சனைகள் வரும் எச்சரிக்கை..!
Open Marriage என்பதில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பேச்சே கிடையாது. இதில் தம்பதிகள் இருவரும் பரஸ்பரம் திருமண உறவுக்கு வெளியே, அதாவது திருமணத்தை மீறிய உறவை வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டு மணமுடிப்பதுதான் இந்த Open Marriage. திருமணமான பின்னரும் கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருக்கலாம், அதேபோல் மனைவியும் வேறொரு கணவருடன் உறவில் இருக்கலாம். இதில் இருவருக்கும் பிரச்னை இருக்காது. இருவரும் திருமண உறவையும், காதல் உறவையும் சேர்த்தே வாழ்வார்கள் எனலாம்.
இந்த Open Marriage என்பது சரியா, தவறா என்பது ஒருபுறம் இருக்க இது குடும்ப உறவில் ஏற்படுத்தும் 4 முக்கிய விளைவுகளை இங்கு காணலாம் .
- ஒரு பார்ட்னரை சமாளிப்பதே பொருளாதார ரீதியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்ற போது, இரண்டு பார்ட்னர்கள் என்றால் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என யோசித்து பாருங்கள். நீங்கள் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் மட்டும் இது சாத்தியமாகும்.
- ஒருவேளையில் இந்த திருமண உறவிலோ அல்லது வெளி உறவிலோ குழந்தைகளை பெற்றெடுத்தால் அவற்றை வளர்ப்பதில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்கலாம். உறவில் இருக்கும்போதே குழந்தைகள் குறித்து தம்பதிகள் உரையாடுவது நல்லது.
- இந்த Open Marriage உறவு கேட்பதற்கு குஷியாக இருந்தாலும் இதில் சில பயங்களும் இருக்கின்றன. ஒருவருடன் மட்டும் அதிக நெருக்கத்தை வைத்துக்கொண்டால் அதில் இருந்து எப்படி மீள்வது என்ற பயமே உங்களை பாதிக்கும். இரண்டில் உறவிலும் நிம்மதியாக இருக்க முடியாது.
- திருமண உறவில் கணவன், மனைவி இருவருக்கும் இடையேயான தூரம் அதிகமாகும். உங்களுக்கு இடையே பொறாமை அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது. இது இது பாதுகாப்பின்மை, மரியாதை குறைவு மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் அதிகப்படியான பொறாமை என்பது குடும்ப வன்முறைக்கு கூட வழிவகுக்கலாம்.
மேலும் படிக்க | முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ