நன்றாக வேலை பார்த்துக்கொண்டே இருப்போம், திடீரென “நாம் ஏன் இங்கு இருக்க வேண்டும்? வேறு ஊருக்கு சென்று வேறு வேலை பார்த்துக்கொள்ளலாமா? ஒரு நாள் யாருக்கும் சொல்லாமல் வெளியூர் சுற்றி பார்த்து வரலாமா? போன்ற எண்ணங்கள் நம் மனதிற்குள் எழத்தொடங்கும். இது போன்ற எண்ணங்கள் எழுவதற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம்.
மன அழுத்தம் அல்லது கட்டுக்கடங்காத உணர்ச்சிகள்:
உங்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்கள், உங்களுக்கு தொடர்ந்து சவால்களையும், அதை கடந்து போக கடினமான சூழல்களையும் உருவாக்கலாம். இதனால், மன அழுத்தம், அடக்கமுடியாத உணர்ச்சிகள் ஏற்படலாம். இதனை கையாளும் அளவிற்கு உங்களுக்கு உங்களிடம் ஆற்றல் இல்லாத உணர்வு ஏற்படும். அப்போது, எங்காவது தப்பி செல்வதுதான் இதற்கு ஒரே வழி என்று உங்களுக்கு தோன்றும். எனவே, முதலில் உங்கள் மனதில் என்ன பிரச்சனை என்பதை பாருங்கள்.
தவிர்த்தல்:
உங்கள் வாழ்க்கை உங்களுக்கு பிடித்தது போல இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளை கடப்பது உங்களுக்கு கடினம் போல தோன்றினாலும் இது போன்ற தப்பித்து செல்லும் உணர்வுகள் தோன்றும். இப்படி, மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் வேறு எங்காவது சென்று புதிதாக வாழ்க்கையை தொடங்கலாம் என்று தோன்றும். இது, உங்களுக்கு அந்த மகிழ்ச்சியற்ற கட்டத்தை தவிர்க்கவும், சங்கடமான சூழ்நிலையை தவிர்க்கவும் இது போன்ற எண்ணங்களை உருவாக்கும்.
மேலும் படிக்க | பௌர்ணமி நிலவைக் கண்டு ஓநாய்கள் ஊளையிடுமா? உண்மை இதுதான்
மாற்றத்திற்கான ஆசை:
ஒரு சில நேரங்களில், எங்காவது தப்பி செல்ல வேண்டும் என்று ஆசை வருவது, நீங்கள் மாற்றத்தை விரும்புவதற்கான அடையாளமாகவும் இருக்கலாம். எங்காவது சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு, திருப்தியற்ற தன்மை ஆகியவற்றால் இது போன்ற “ஓடி விட வேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம்” அப்போது, உங்களுக்கு உங்களது சூழலை மாற்ற வேண்டும் என்று தோன்றுகையில் இது போன்ற எண்ணங்கள் ஏற்படலாம்.
மனநிலை மாற்றம்:
ஒரு சில நேரங்களில், நமது மனநிலை சரியில்லாத நேரத்தில் இது போன்று எங்காவது தப்பியோட வேண்டும் என்று தோன்றும். பதற்றம், மன அழுத்தம், பிறரிடம் இருந்து விலகியிருத்தல் போன்ற காரணங்களாலும் இப்படி தோன்றலாம். இந்த சூழ்நிலைகளில், உங்கள் மனநிலைகளை பத்திரமாக பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இது, உங்களை பெருமளவில் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
எல்லைக்கோடு:
அடிக்கடி, ஓடிப்போக வேண்டும் என எண்ணம் தோன்றும். எனவே, உங்களது சுய மரியாதையும் உங்கள் தகுதியும் எங்காவது குறைத்து மதிப்பிடப்படுகிறதா இல்லையா என்று பாருங்கள். உங்கள் சூழலும், உங்களை சுற்றியிருக்கும் மனிதர்களும் உங்களுக்கு சரியானவர்களாக இல்லை என்றாலும் அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இது போன்ற எண்ணங்கள் தோன்றலாம். அப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் வேறு எங்கவாது இடமாற்றம் செய்வது ஏற்புடையதாக இருக்கும்.
மேலும் படிக்க | கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ