Dating Tips In Tamil: ஆண் - பெண் உறவுச் சிக்கல் என்பது காலம் காலமாக இருந்து வருவதுதான். இருப்பினும் அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவத்தை பெறும் எனலாம். இன்றைய காதல் வாழ்க்கை என்பது மற்ற எந்த காலகட்டத்தையும் விட பெரும் சிக்கலுக்கு உரியதுதான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை.
ஆண் - பெண் இடையேயான பேதங்கள் முற்றிலும் குறைந்துவிடவில்லை என்றாலும் ஓரளவுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பெண்களுக்கும் தற்காலத்தில் கிடைத்திருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம். இருப்பினும் நவீன காலகட்டத்திற்கு உள்ள பிரச்னைகள் இன்றளவும் ஆண் - பெண் இடையே தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அது திருமண உறவு என்றாலும் சரி, காதல் உறவு என்றாலும் சரி, டேட்டிங் வாழ்விலும் சரி ஆண் - பெண்களுக்கு இடையிலான பிரச்னைகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன.
இதில் பெண்கள் உறவில் இருக்கும் பிரச்னைகள் குறித்து அதிகம் யோசிப்பார்கள். குறைந்தபட்சம் அதற்கு தீர்வையாவது பெற நினைப்பார்கள். இது பொதுவாக சொல்வது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், ஆண்கள் எப்போதுமே உறவில் வரும் பிரச்னைகளுக்கு தொடக்கத்தில் அவ்வளவு கவனம் செலுத்த மாட்டார்கள். இது அவர்களிடம் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய டிப்ஸ் ஆண், பெண் இருவருக்குமானது. அதுவும் இது காதல் உறவில் இருப்பவர்களுக்கோ அல்லது திருமண உறவில் இருப்பவர்களுக்கோ இல்லை. டேட்டிங் உறவில் இருப்பவர்களுக்கே இன்றைய டிப்ஸ். அதுவும் பல பேரிடம் டேட்டிங் சென்ற போதிலும் யாரும் தனக்கு சரிவரவில்லை என நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் எனலாம்.
அதாவது எந்தவிதமான உறவிலும் முதல் சந்திப்பு என்பது நிச்சயம் மிக முக்கியமானதாகும். அது மிக மிக சிறப்பாகதான் இருக்க வேண்டும் என்றில்லை, இருப்பினும் முதல் சந்திப்பு என்பது நிச்சயம் மறக்க முடியாத அளவிற்கு உங்களுக்குள் ஒரு நினைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா... அப்படியிருக்கும்பட்சத்தில் நீங்கள் பெண்ணுடன் முதல்முதலாக டேட்டிங் செல்கிறீர்கள் என்றால் இந்த 4 விஷயங்களை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். இதை செய்தால் அந்த முதல் சந்திப்பு சிறப்பானதாக மாறும்.
முதல் டேட்டில் மறக்கக் கூடாது 4 விஷயங்கள்
- மிக முக்கியமான விஷயமான. முதல் டேட் அன்று நீங்கள் சொன்ன நேரத்தை விட தாமதமாக செல்லவே கூடாது. சொன்ன நேரத்திற்கு சற்று முன்னர் செல்வது நலம். தாமதமாக சென்று மற்றொருவரை காக்க வைப்பது சரியாக இருக்காது. நீங்கள் விரைவாக வருகிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களுக்கும், அவர்களின் நேரத்திற்கும் மதிப்பளிக்கிறீர்கள் என அர்த்தம், இதுவும் நீங்கள் இந்த டேட்டிங்கில் விருப்பமாக இருப்பதை குறிக்கும்.
- அடிக்கடி மொபைல் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். கால் வந்தாலோ அடிக்கடி மெசேஜ் வந்தாலோ கூட, அவசரமில்லாதபட்சத்தில் அதற்கு பதிலளிக்காதீர்கள். அவர்கள் முன்னர் அடிக்கடி மொபைலை பயன்படுத்தினால் இந்த சந்திப்பில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாகிவிடும். எனவே மொபைலை சைலன்ட் மோடில் போட்டு, உங்கள் பார்ட்னர் உடன் மனது விட்டு பேசுங்கள்.
- மனது விட்டு பேசுங்கள் என சொல்லியதற்காக இஷ்டத்திற்கு, கடகடவென அனைத்தையும் பேசக் கூடாது. அதனால், குறைவாகவும், தேவைக்கு ஏற்பவும் பேசுவது நல்லது. நீங்கள் பேசுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல், உங்களின் பார்ட்னரை பேசவிட்டு கேட்பதும் நல்லது.
- மேலும், முதல் டேட்டிங்கிலேயே அவர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். அவர்களாக பேசாவிட்டால் அவர்களின் முந்தைய உறவு குறித்தோ, குடும்ப பிரச்னைகள் குறித்தோ பேச வேண்டாம். பொதுவாக உங்கள் இருவர் குறித்து பேசுங்கள்.
இவற்றை முறையாக செய்தாலே உங்களின் முதல் சந்திப்பு மறக்க முடியாததாகிவிடும். ஒருவேளை உங்களுக்கு வருங்காலத்தில் அவருடன் உறவு கைக்கூடாவிட்டாலும் அவர்களுடனான முதல் சந்திப்பு பசுமையான நினைவை தரும்.
மேலும் படிக்க | ஊர் சுற்றினால் கிடைக்கும் பணத்தாலும் வாங்க முடியும் 10 அற்புதமான விஷயங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ