இதுதானா வர்மா படத்திற்காக துருவ் விக்ரமின் கெட்டப்? Photo Inside

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

Last Updated : Mar 5, 2018, 11:03 AM IST
இதுதானா வர்மா படத்திற்காக துருவ் விக்ரமின் கெட்டப்? Photo Inside title=

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு `வர்மா' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

பாலா இயக்கும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் சீயான் விக்ரம் தற்போது துருவ்வின் புதிய கெட்டப் உள்ள போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

Stargazing. #dhruvfinallyanatchathiram

A post shared by Vikram (@the_real_chiyaan) on

 

Trending News