நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். குறைவற்ற செல்வத்தை வணங்கும் கடவுளை வணங்கும் நாள் தன்தேரஸ். இன்று தன்தேரஸ் நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி மாதம் தேய்பிறையின் பதின்மூன்றாவது நாளில் கொண்டாடப்படும் இன்று வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள், தங்கம் உட்பட உலோகங்கள் வாங்குவது மிகவும் சிறப்பானது. தந்தேராஸ் திருநாள் வட இந்தியாவில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆயுர்வேதத்தின் கடவுளாகக் கருதப்படும் தன்வந்திரியை வழிபடும் நாள் இது.
இன்றைய தினத்தில் தன்வந்திரியை வழிபடுவதால், நோயற்ற வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால், முதலில் தன்வந்திரியை வரவேற்று வணங்கிய பிறகு, அதற்கு அடுத்த நாள் அன்னை மகாலட்சுமியை பூஜிப்பது தொன்று தொட்டு தொடரும் வழக்கம்...
இந்திய ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகம், தன்தேராஸ் திருநாளை "தேசிய ஆயுர்வேத தினமாக" அனுசரிக்கிறது.
Read Also | அடுப்பங்கரையில் இருக்கும் இயற்கை வயகரா
புராணங்களின்படி, பாற்கடலை கடையும்போது, அதிலிருந்து வெளிபட்டவர் தன்வந்திரி. ஒரு கையில் அமிர்தம் நிறைந்த கலசத்தையும், மறு கரத்தில் ஆயுர்வேத சுவடிகளுடன் வெளிப்பட்ட தன்வந்திரி, தேவர்களின் மருத்துவராக கருதப்படுகிறார்.
தீபாவளிக்கு முதல் நாளான தந்தேராஸ் நாளன்று, மாலையில் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படுகிறது. வீடுகள் அலங்கரிக்கப்பட்டு, அன்னை லட்சுமியை வழிபடுவதும் இன்று தான். தந்தேராஸ் நாளன்று தங்கம், வெள்ளிப் பொருட்கள் புதிய பாத்திரங்கள் போன்றவற்றை புதியதாக வாங்குவார்கள். இது வீட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக கருதப்படுகிறது.
இன்று குறிப்பாக சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் நல்ல நாள். அதுமட்டுமல்ல, இன்றைய தினம் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதன பொருட்கள் மற்றும் வாகனங்களையும் வாங்குகின்றனர்.
இன்றைய தினம் துளசி செடிக்கு பூஜை செய்வதும் வீட்டிற்கு நல்லது.
Also Read | திருப்பதி பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரனின் அருள் பெறும் வழி இதுதான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR