Watch Viral Video: மழைக்கு பெஞ்சின் அடியில் ஒதுங்கி இளைப்பாறிய முதலை…!!!

மழைக்கு ஒதுங்க நமக்கு வீடு இருக்கிறது. ஆனால், முதலைகள் என்ன செய்யும் பாவம். மழையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த முதலை குடியிருப்பு இருக்கும் இடத்தில் உள்ள பென்ஞ்ச் அடியில் தஞ்சம் புகுந்தது. 

Last Updated : Aug 17, 2020, 05:49 PM IST
  • மழை அதிகம் பெய்யும் போது, வனவிலங்குகள் அடிக்கடி அங்கே வரும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
  • முதலை ஆளையே அடித்துக் கொள்ளும் வல்லமை பெற்றது என்பதால் அதை பிடிக்கும்போது அனைத்து வகையான முன்னெச்சரிக்கைகளும் கடைபிடிக்கப்பட்டது என முதலை பிடிக்க வந்தவர் கூறினார்.
  • எப்படியோ, முதலை யாரையும் தாக்காமல், பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Watch Viral Video: மழைக்கு பெஞ்சின் அடியில் ஒதுங்கி இளைப்பாறிய முதலை…!!!  title=

குஜரத்தில் வதோத்ரா மாவட்டத்தில் உள்ள ராஜ்மஹால் சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 5 அடி நீள முதலையை குஜராத்தின் மிருக வதை தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் மீட்டனர்.

குடியிருப்பில் உள்ளவர்கள், ஒரு பென்ஞ்சின் அடியில் முதலை அமர்ந்திருப்பதை பார்த்து, வன துறை அதிகாரிகளுக்கும், முருக வதை தடுப்பு அமைப்பிற்கும் தகவல் அளித்தனர்.

மேலும் படிக்க | வயலுக்குள் நுழைந்த முதலை.... கிராமத்தில் ஏற்பட்ட பரபரப்பு...!!!

மழைக்கு ஒதுங்க நமக்கு வீடு இருக்கிறது. ஆனால், முதலைகள் என்ன செய்யும் பாவம். மழையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த முதலை குடியிருப்பு இருக்கும் இடத்தில் உள்ள பென்ஞ்ச் அடியில் தஞ்சம் புகுந்தது.      

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த, இரண்டு தன்னார்வலர்கள், பெஞ்சின் அடியில் இருந்த முதலையை பாதுகாப்பாக மீட்டனர்.

அதை ஒரு சாக்கில் பிடித்து வைத்தனர். அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | வீடியோவில் விசிட் ..வாட்ஸ் அப்பில் டீல்…. கைக்கு வந்தது தீவு…!!!

மழை அதிகம் பெய்யும் போது, வனவிலங்குகள் அடிக்கடி அங்கே வரும் என்று கூறிய வனத்துறை அதிகாரிகள், அதனை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் சேர்க்கும் பணியை தாங்கள் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதற்கான அவர்கள் ஹெல்ப் லைன் எண்ணை வைத்துள்ளனர். விடுமுறை ஏதும் இன்றி இவர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியில் மழையின் போது, அடிக்கடி காட்டுபகுதியில் இருந்து வன விலங்குகள் வரும் என அங்கு இருப்பவர்கள் கூறுகின்றனர்.

முதலை ஆளையே அடித்துக் கொள்ளும் வல்லமை பெற்றது என்பதால் அதை பிடிக்கும்போது அதற்கான சாதனங்களை பயன்படுத்தி  அதனை தன்னார்வலர்கள் பிடித்தனர்

எப்படியோ, முதலை யாரையும் தாக்காமல், பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Trending News