நாம் பயன்படுத்து முககவசங்களில் எது பாதுகாப்பானது... ஆய்வு கூறுவது என்ன?

நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது? என ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள் பற்றி நாம் விரிவாக காணலாம்..!

Last Updated : Oct 31, 2020, 01:12 PM IST
நாம் பயன்படுத்து முககவசங்களில் எது பாதுகாப்பானது... ஆய்வு கூறுவது என்ன? title=

நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது? என ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள் பற்றி நாம் விரிவாக காணலாம்..!

கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க முகமூடி அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி சோப்பிட்டு கைகளை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை நாம் கையாண்டு வருகிறோம். இயல்பாக கொரோனா வைரஸ் தும்மும் போதும், இருமும் போதும் வெளியாகும் நீர்க்குமிழிகள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது என்பதை  நாம் அனைவரும் அறிவோம்.

இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளிடமிருந்து நாங்கள் பெற்ற முதல் தகவல்களில் ஒன்று, முகமூடிகளைப் பயன்படுத்துவது SARS-CoV-2 வைரஸ் பரவும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும் என்பது தான். சந்தையில் இருந்து பல்வேறு வகையான முகமூடிகள் விற்பனை செய்கிறது. சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகையான முகமூடிகளில், உண்மையில் என்ன வேலை செய்கிறது மற்றும் பயனுள்ள முடிவுகளைக் காட்டுகிறது மற்றும் சந்தைப்படுத்தல் வித்தை என்ன என்பதைப் புரிந்துகொள்வது நமது பொறுப்பு. 

முகமூடிகள் இப்போது நமது அலமாரிகளின் மற்றும் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எனவே, SARS-CoV-2 வைரஸ் பரவும் அபாயத்திலிருந்து எந்த வகையான முகமூடிகள் உண்மையில் நம்மைக் காப்பாற்றும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்நிலையில், நாம் பயன்படுத்தும் முககவசங்கள் உண்மையிலேயே நமது பாதுகாப்பினை உறுதி செய்கின்றனவா என்று சிந்தித்தது உண்டா?. 

விஞ்ஞானிகள் சிலர் இந்த கேள்விக்கான விடையை ஒரு சிறிய ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டு பயன்படுத்தப்படக்கூடிய முககவசங்கள் வெறும் 7 சதவிகித தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டுமே வடிகட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர். 15 வகையான முககவசங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சூப்பர் ட்ரக், டெர்மின் 8 லைட்வெயிட் ப்ரீதபிள், லாயிட்ஸ் பார்மசி மற்றும் பிற இடங்களில் கிடைக்கும் எஸ்டிகெட் மாஸ்க் மற்றும் ஆஸ்டா ஒயிட் பேட்டர்ன் ஆகிய முககவசங்கள் பெரிதளவு பயனற்றவை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ALSO READ | கொரோனாவை செயலிழக்க வைக்கும் முகமூடியை வடிவமைத்த விஞ்ஞானிகள்..!

கண்டுபிடிப்புகளின் விளைவாக ஆஸ்டா அதன் முகத்தை விற்பனையிலிருந்து விலக்கியுள்ளது. டெர்மின் 8 மற்றும் சூப்பர் ட்ரக் நிறுவனங்கள் இந்த ஆய்வினை முற்றிலுமாக மறுத்துள்ளன. மேலும் தங்களின் முககவசங்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இந்த வழிகாட்டுதலில் பாக்டீரியா வடிகட்டல் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லையென்றும் கூறியுள்ளன.

நிறுவனத்தின் மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள முககவசங்கள் மற்றும், Bags of Ethics நிறுவனத்தின் முககவசங்கள் ஆகியவை பாக்டீரியாக்களை வடிகட்டுவதில் பங்கு வகிக்கின்றன என்றும் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. முககவசங்கள் எந்த அளவில் பாக்டீரியாக்களை வடிகட்டுகின்றன என்றும், சுவாசிக்கும் வசதி எந்த அளவில் உள்ளது என்றும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அதன் தரம் எந்த அளவில் உள்ளது என முககவசங்கள் பரிசோதிக்கப்பட்டன என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பொதுவாக ஒற்றை அடுக்கு கொண்ட முககவசங்களை காட்டிலும் மூன்று அடுக்குகளை கொண்ட முககவசங்கள் நீர்த்திவளைகளை நன்றாக வடிகட்டுவதாகவும், ஆனால் சுவாசிப்பதில் சிக்கலை கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Trending News