10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... HCLல் வேலை செய்யலாம்

HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 16, 2022, 02:38 PM IST
  • ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
  • நவம்பர் 5ஆம் தேதி நேர்காணல்
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... HCLல் வேலை செய்யலாம் title=

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்  (HCL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள க்ளெர்க் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கிறது. 

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Clerk பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிடும் நபரா நீங்கள்? இந்த முதலீட்டு திட்டம்தான் உங்களுக்கு ஏற்றது

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள்வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.hindustancopper.com/Upload/Notice/0-638013453331997500-Notic... என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நவம்பர் 5ஆம் தேதி நடக்கும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | மெடிக்கல் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியானது? எங்கே வேலை?

மேலும் படிக்க | அதிக லாபம் வேண்டுமா? போஸ்ட் ஆபிசின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News