லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்..!!

இளைஞர்கள் படித்து முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்றால், வேலை வாய்ப்பு அதிக உள்ள, அதே சமயத்தில், நல்ல சம்பளம் கிடைக்கும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 24, 2024, 04:54 PM IST
  • ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் வரை சம்பாதிக்கக்கூடிய சில வேலைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • சில இளைஞர்கள் தங்கள் திறமையின் அடிப்படையில் அதிக சம்பளத்திற்கு வெளிநாடு கூட செல்கின்றனர்.
  • சில வருட பணி அனுபவத்திற்குப் பிறகு லட்சங்களை சம்பாதிக்கக்கூடிய பல தொழில் வாய்ப்புகள் உள்ளன.
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்..!! title=

இளைஞர்கள் படித்து முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்றால், வேலை வாய்ப்பு அதிக உள்ள, அதே சமயத்தில், நல்ல சம்பளம் கிடைக்கும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். படித்து முடித்த பிறகு, வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, முடிந்தவரை நன்றாக சம்பாதிப்பதில்தான் அனைவரின் குறிக்கோளும் இருக்கும். சில இளைஞர்கள் தங்கள் திறமையின் அடிப்படையில் அதிக சம்பளத்திற்கு வெளிநாடு கூட செல்கின்றனர்.

எனினும், இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாட்டு வேலையைப் போல சம்பாதிக்க விரும்பினால், கவலைப்படத் தேவையில்லை. சில வருட பணி அனுபவத்திற்குப் பிறகு லட்சங்களை சம்பாதிக்கக்கூடிய பல தொழில் வாய்ப்புகள் உள்ளன. ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் வரை சம்பாதிக்கக்கூடிய சில வேலைகளை பற்றி அறிந்து கொள்ளலாம். இவை நாட்டின் உயர் ஊதியம் பெறும் வேலைகள் பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்தத் துறைகளில் வேலை கிடைத்தால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

அதிக ஊதியம் பெறும் வேலைகள்

இந்தியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் பல தொழில் வாய்ப்புகள் உள்ளன. அங்கு நல்ல சம்பளத்துடன், வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகம். தற்போது, ​​இந்தத் துறைகளில் வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சம் இல்லை, அதாவது பணிநீக்கம் அல்லது AI மூலம் நிலை மாறும் வாய்ப்பு இல்லை. இந்தியாவில் முதல் 5 அதிக சம்பளம் தரும் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

விமான ஓட்டுநர் என்னும் பைலட் பணி

கடந்த சில ஆண்டுகளில், விமானப் போக்குவரத்துத் துறை கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தத் துறையில் சிறந்த தொழில் வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு, அதாவது 2023ல், பல விமான நிறுவனங்கள் தங்கள் அனுபவம் வாய்ந்த விமானிகளுக்கு நல்ல சம்பள உயர்வை வழங்கியுள்ளன. வணிக மற்றும் இராணுவ விமானிகளின் ஆரம்ப சம்பளம் சுமார் ரூ.9 லட்சம். பிறகு அனுபவம் கூடும் போது சம்பளம் ரூ.70 லட்சமாக உயரும்.

கல்வித் தகுதி: ஏவியேஷன் படிப்பில் சேர, கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமான ஓட்டுநர் பயிற்சியை சிறப்பாக முடித்தால் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் கேம்பஸ் இண்டர்வ்யூவிலேயே வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.

AI/ML பொறியாளர் (AI/ML Engineer)

2023 ஆம் ஆண்டில், Netflix நிறுவன வேலை வாய்ப்பு மிகவும் வைரலானது. நெட்ஃபிக்ஸ் மெஷின் லேர்னிங் தளத்தை சிறப்பாகப் பயன்படுத்த தயாரிப்பு நிர்வாக வேலைகான அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைக்காக, நெட்ஃபிக்ஸ் ரூ 2.5 கோடி முதல் ரூ 7.5 கோடி வரை சம்பளம் வழங்கியது. 8 வருட அனுபவத்துடன், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) பொறியாளர்கள் ரூ. 45 லட்சம்   வரை சம்பாதிக்கலாம்.

AI/ML பொறியாளருக்கான கல்வித் தகுதி: அறிவியல் அல்லது B.Tech பட்டம், அதன் பிறகு AI இல் முதுநிலை அல்லது நிபுணத்துவம் செய்வதற்கான தகுதியைப் பெறலாம். இந்த நாட்களில் பல பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் பி.டெக் பட்டப்படிப்பை வழங்குகின்றன.

மேலும் படிக்க | துரித உணவை அதிகம் சாப்பிடும் குழந்தைகளை கட்டுப்படுத்துவது எப்படி...!

வணிக ஆய்வாளர்கள் பணி

நிதித்துறையில் மிகவும் திறமையானவர்கள் மட்டுமே அதில் உயிர் பிழைத்து சிறந்து விளங்க முடியும். இந்தத் துறையிலும் அது தொடர்பான பிற தொழில்களிலும் ஒவ்வொரு ஆண்டும் அற்புதமான வளர்ச்சி காணப்படுகிறது. வணிக ஆய்வாளர், உறவு மேலாளர், நிதி ஆய்வாளர் மற்றும் இடர் மேலாளர் போன்ற பதவிகள் (Business Analyst) நல்ல சம்பளம் மற்றும் தொழில் வளர்ச்சி வாய்ப்பை வழங்குகின்றன. இந்தத் துறையின் ஆரம்ப சம்பளம் சுமார் ரூ.6 லட்சம். அனுபவம் கூடும் போது, ​​உங்கள் சம்பளம் ரூ.34-40 லட்சமாக உயரும்.

கல்வித் தகுதி: வங்கிச் செயல்பாடுகள், பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் மற்றும் விற்பனை பற்றிய அறிவுடன் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (நிதி துறை விரும்பத்தக்கது). நீங்கள் விரும்பினால், முதுகலை பட்டம் அல்லது அது தொடர்பான ஏதேனும் டிப்ளமோ படிப்பையும் படிக்கலாம்.

சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் பணி

கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற சாதனங்கள் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டன.  ஒரு மென்பொருள் நிபுணர் சம்பளம் ஆண்டுக்கு ரூ. 32 லட்சம் வரை (Software Architect Salary) இருக்கும். தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு ஒருமுறை சில புதிய அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சந்தையில் மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் பணிக்கான கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது இந்தத் துறையில் வேகமாகவும் அதிக வெற்றியைப் பெறவும் உதவும். இதனுடன், பல நிரலாக்க மொழிகள் தேர்ச்சி பெற்றால், அது உங்கள் வேலை வாய்ப்பை மேலும் அதிகரிக்கும்.

தரவு விஞ்ஞானி வேலை (Data Scientist): 

தரவு விஞ்ஞானிகள் புதிய யோசனைகள் மற்றும் புதுப்பிப்புகள் மூலம் பழைய தரவுகளுடன் நிலைமையை ஆராய்கின்றனர்.  தரவு விஞ்ஞானியின் பணி மிகவும் விரிவானது. அவர்கள் தரவை பகுப்பாய்வு செய்கிறார்கள். அதிலிருந்து பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய அல்காரிதம்களை உருவாக்குகிறார்கள். ஒரு தரவு விஞ்ஞானியின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.14 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருக்கும்

கல்வித் தகுதி: பல பல்கலைக்கழகங்களில் டேட்டா சயின்ஸ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தொழில் செய்ய, டேட்டா சயின்ஸில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தவிர, உங்கள் திறன்களை மேம்படுத்துவதில் நேரத்தை முதலீடு செய்தால், நீங்கள் நல்ல சம்பளத்தை பெறலாம்.

மேலும் படிக்க | பெண்களே உஷார்! ஆண்களின் இந்தப் பழக்கங்களை புறக்கணிக்க வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News