மாப்பிள்ளை பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ₹.62,000 அபராதம்!

சண்டிகரில் பதிவு செய்த பெண் டாக்டருக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.62,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!!

Last Updated : Oct 19, 2019, 04:41 PM IST
மாப்பிள்ளை பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ₹.62,000 அபராதம்! title=

சண்டிகரில் பதிவு செய்த பெண் டாக்டருக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.62,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்... அதுவும், இந்திய திருமணம்  என்றாலே வண்ணமயமான கொண்டாட்டமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது திருமண நாள் மறக்க முடியாத அற்புதமான நிகழ்வாக அவர்களின் மனதில் பதிந்திருக்கும். திருமணத்திற்கு மணமக்களை தேடித்தருவதற்க்கு என்றே பல நிறுவனங்கள் உள்ளது. அவர் திருமணம் ஆகும் வயதில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தங்களின் வாழ்க்கை துணியை தேர்ந்தெடுக்கின்றனர். சிலருக்கு வாழ்க்கைதுணை அமையும் சிலருக்கு அமையாது. இந்நிலையில், சண்டிகரில் பதிவு செய்த பெண் டாக்டருக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.62,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுரேந்திர பால் சிங் என்பவர், அரியானா அரசு டாக்டரான தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடுவதற்காக 2017 ஆம் ஆண்டு மேட்ரிமோனி ஒன்றில் பதிவு செய்து வைத்துள்ளார். இதில் ராயல் பேக்கேஜ் உறுப்பினராக ரூ.50,000 செலுத்தி பதிவு செய்துள்ளார். 9 மாதங்களில் 18 க்கும் அதிமான டாக்டர் வரன்களை மேட்ரிமோனி நிறுவனம் வழங்கி உள்ளது. ஆனால் பொருத்தமான மாப்பிள்ளை அமையவில்லை. நீண்ட காலம் காத்திருந்தும் மகளுக்கு மாப்பிள்ளை கிடைக்காததால், விரக்தி அடைந்த சுரேந்திர பால், நுகர்வோர் அமைப்பிடம் புகார் அளித்தார்.

அதில், நீண்ட காலம் காத்திருந்தும் தனது மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளையை மேட்ரிமோனி நிறுவனம் தேடி தரவில்லை. அவர்கள் அளித்த வரன்களை எதையும் நான் பார்க்கவில்லை. இதனால் உறுப்பினர் கட்டணமாக நாங்கள் அளித்த ரூ.50,000-யை ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த புகாரை விசாரித்த நுக்ரவோர் அமைப்பு, மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.62,000 அபராதம் விதித்தது. சேவை கட்டணம், வட்டி, வழக்கிற்கான செலவு ஆகியவையும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News