செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 27 வரை இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் உஷாரா இருங்க

Mangal Gochar 2022: தைரியம், வீரம் போன்றவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன் தருவதாகவும், சிலருக்கு சிரமங்களை சந்திக்க நேரிட செய்வதாகவும் கூறப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 25, 2022, 02:12 PM IST
  • எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
  • செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி ஆவார்.
  • கடக ராசியில் பலவீனமாகவும் இருப்பார்.
செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 27 வரை இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் உஷாரா இருங்க title=

ஜோதிடத்தில் செவ்வாய் ஆற்றல், சகோதரன், நிலம், வலிமை, தைரியம், வீரம் ஆகியவற்றின் காரக கிரகம் என்று கூறப்படுகிறது. பொதுவாக செவ்வாயின் ராசி மாற்றம் சிறப்பு வாய்ந்தது. செவ்வாய் மாற்றத்தின் பலன் அனைத்து 12 ராசிகளிலும் உள்ளது. இத்தகைய செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி ஆவார். இந்த செவ்வாய் மகர ராசியில் பலமாகவும், கடக ராசியில் பலவீனமாகவும் இருப்பார்.

இத்தகைய செவ்வாய் இதுவரை கும்ப ராசியில் பயணித்து வந்தார். 2022 மே 17 ஆம் தேதியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்து பயணிக்க ஆரம்பித்தார். மேலும் 27 ஜூன் 2022 காலை 06 மணி வரை இந்த ராசியில் இருக்கிறார். அதன் பிறகு செவ்வாய் மீன ராசியிலிருந்து விலகி மேஷ ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் பெயர்ச்சியின் போது எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: ஜூன் 5 முதல் சனி இந்த ராசிக்காரங்களுக்கு இன்னல்களை தருவார் 

மேஷம் - செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் பெயர்ச்சியாகுகிறார். இந்த வீட்டில் செவ்வாய் பெயர்ச்சியாவது உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீண்ட பயணம் செல்ல வாய்ப்புகள் உண்டாகும். தேர்வையற்ற பணம் செலவழிக்க நேரிடும். மன உளைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம் - செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பெயர்ச்சியாகுகிறார். அதன்படி உங்கள் கோபம் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. வாழ்க்கையில் திடீர் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். குடும்ப உறவுகள் மோசமடையலாம்.

கன்னி - உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சியாகுகிறார். அதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும். கூட்டுப் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் கலவையான சூழல் இருக்கும். உறவு மேம்படும். மக்களுக்கு உதவு முயர்சிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுதாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News