திருமண பெண் தனது ஆடையில் தீ வைத்து திருமண நிகழ்ச்சியை கொண்டாடிய புதுவித நிகழ்வு அனைவரையும் திடுக்கிடவைத்துள்ளது...!
திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், இரு ஓரினச்சேர்க்கையாளரான பெண் ஒருவர் தகலாது திருமணத்தை வித்தியாசமாக நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் லொவா மாநிலத்தைச் சேர்ந்த நெருங்கிய தோழிகள் ஏப்ரில் சோய் (32 வயது), பெத்தனி பைர்னஸ் (28வயது). இவர்கள் இருவரும் ஏற்கெனவே திருமணமான நிலையில் தங்களது கணவர்களின் சம்மதத்தோடு அவர்களிடமிருந்து விவாகரத்துப் பெற்று த்னகளது கணவர்களின் முன்னிலையில் ஏப்ரில் சோய், பெத்தனி பைர்னஸ் இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தங்களது திருமணத்தை விநோதமாக நடத்த விரும்பிய இவர்கள் வெர்னான் என்ற பகுதியில் உள்ள குன்றின் மேல் தங்களது திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது தங்களது திருமண ஆடையில் தீ வைக்குமாறு கணவர்களை இருத் தோழிகளும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்து திருமண ஆடையில் தீப் பந்தத்தைக் கொண்டு தீயைப் பற்ற வைத்தனர். அவ்வாறே திருமண தம்பதிகள் போஸ் கொடுத்தனர். அடுத்த சில நொடிகளில் தீப்பற்றிய மேலங்கி கழன்று விழுந்ததும், இருவரும் அதிலிருந்து வெளியேறி தங்களது திருமணத்தை ஆனந்தமாக கொண்டாடினர். இந்த வினோத திருமணத்தின் வீடியோக் காட்சி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.