2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் சிறந்த BSNL ரீசார்ஜ் திட்டங்களின் முழு பட்டியல் இதோ..!
குறைந்த விலையில் வருடம் வரை செல்லுபடியாகும் திட்டங்கள் உள்ளன மற்றும் தினசரி 5GB வரை தரவுகளும் கிடைக்கும்..!
BSNL சமீபத்தில் MTNL நெட்வொர்க்கில் தனது வாடிக்கையாளர்களுக்கு “வரம்பற்ற” குரல் அழைப்பு மற்றும் SMS-யை வழங்கியுள்ளது. BSNL-லின் ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.97 முதல் தொடங்குகின்றன. இது BSNL மற்றும் MTNL ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்புடன் 2019 அக்டோபரில் தொடங்கப்பட்டது.
குரல் அழைப்பு சலுகைகள் தவிர, BSNL வாடிக்கையாளர்களுக்கு MTNL ஒரு நாளைக்கு 100 SMS கொண்ட ரூ. 97, ரூ. 118, ரூ. 187, ரூ. 199, ரூ. 247, ரூ. 297, ரூ. 349, ரூ. 399, ரூ. 399, ரூ. 447, ரூ. 499, மற்றும் ரூ. 1,098 என்ற ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ தற்போது வரம்பற்ற இலவச அழைப்போடு தினமும் 3GB வரை தரவை வழங்கும் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒரு வருடம் வரை செல்லுபடியாகும் திட்டங்கள் உள்ளன மற்றும் தினசரி 5GB வரை தரவுகளும் கிடைக்கின்றன.
ALSO READ | மலிவான விலையில் 4 புதிய Bharat Fiber Broadband திட்டங்களை வெளியிட்ட BSNL!!
BSNL இரண்டு புதிய திட்டங்களை கொண்டு வந்தது, அது ரூ .365 மற்றும் ரூ .2,399 ஆகும். ரூ.365 ரூபாய் திட்டம் 365 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். இது வரம்பற்ற அழைப்பு, 2GB தரவு மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த வசதிகளின் நன்மைகள் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. இது தவிர, நிறுவனத்தின் ரூ.2399 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வெறும் 600 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தியாவில் BSNL ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் இதோ.
BSNL-ன் ₹.997 ப்ரீபெய்ட் திட்டம்...
BSNL-லின் இந்த திட்டம் அதிக தரவு மற்றும் அழைப்பு நன்மைகளுடன் நீண்ட கால செல்லுபடியை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு மிகவும் சிறந்தது. இந்த திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு நாளும் 3GB தரவையும், தினமும் 250 நிமிடம் இலவச அழைப்பையும் பெறலாம். டெய்லி 100 இலவச SMS வழங்கும் இந்த திட்டம் 180 நாட்கள் செல்லுபடியாகும்.
BSNL-லின் ₹.2,399 ப்ரீபெய்ட் திட்டம்...
ரூ.2,399 இந்த ப்ரீபெய்ட் திட்டம் 600 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 250 அவுட்கோயிங்க் அழைப்புகளைப் பெறுகிறது. ஆனால், அதற்கு தரவு நன்மை இல்லை. அறிக்கையின் படி, இந்த திட்டம் இந்தியா முழுவதும் கிடைக்கிறது. BSNL ட்யூன்கள் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.
BSNL-லின் ₹.1999 ப்ரீபெய்ட் திட்டம்...
இது ஒரு வருட செல்லுபடியுடன் தினசரி 3GB தரவையும் நீங்கள் பெறலாம், BSNL-லின் இந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது. இந்த திட்டத்தில் 250 நிமிடங்கள் மற்றும் 100 இலவச SMS மற்றும் அழைப்பையும் வழங்குகிறது. திட்டத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், ஈரோஸ் நவ் இலவச சந்தா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
BSNL-லின் ₹.786 ப்ரீபெய்ட் திட்டம்...
ரூ .786 திட்டத்தில், 90 நாட்கள் செல்லுபடியாகும். இதில் 30GB தரவு கிடைக்கிறது. BSNL-ன் இந்த திட்டம் ஆந்திரா, குஜராத் மற்றும் கேரளா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் கிடைக்கிறது.
BSNL-லின் ₹.599 STV திட்டம்...
BSNL-லின் இந்த சிறப்பு கட்டண வவுச்சர் தினசரி 5GB டேட்டாவுடன் வருகிறது. இது மட்டுமல்லாமல், இந்த வவுச்சரில் ஒவ்வொரு நாளும் அழைப்பதற்கு நிறுவனம் 250 நிமிடங்கள் தருகிறது. 90 நாட்களுக்கு நீடிக்கும் இந்த திட்டத்தில் தினசரி 100 இலவச SMS-யை வழங்கப்படுகிறது. நிறுவனம் இந்த திட்டத்தை வொர்க் ஃப்ரம் ஹோம் STV என அறிமுகப்படுத்தியது.
BSNL-லின் ₹.365 ப்ரீபெய்ட் திட்டம்...
இந்த திட்டம் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற வரம்பில் குரல் அழைப்புகளை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவச குரல் அழைப்பின் வரம்பை எட்டிய பின்னர் அடிப்படை திட்ட கட்டணத்தின்படி கட்டணங்கள் பொருந்தும். இந்த திட்டம் தினசரி 2GB தரவைப் பெறுகிறது. மேலும், இந்த வரம்பை அடைந்த பிறகு தரவு வேகம் 80 Kbps ஆக குறைகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் ஆகியவை அடங்கும். இந்த திட்டம் 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 60 நாள் நன்மைகள் காலம் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் குரல் மற்றும் தரவு வால்டரைச் சேர்ப்பதன் மூலம் அழைப்பு மற்றும் தரவு வசதியைத் தொடர வேண்டும்.