BSNL Prepaid Plans: இந்த ரூ 98 ப்ரீபெய்ட் திட்டம் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்க!

பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில், அற்புதமான சலுகைகளைக் கொண்ட பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2021, 09:52 PM IST
  • ஊழியர்களும், மாணவர்களும், இணையத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.
  • தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அற்புதமான சலுகைகளைக் கொண்ட பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.
  • பிஎஸ்என்எல் நிறுவனம் சிம் கார்டுகளை வீட்டுக்கு டெலிவரி செய்கிறது.
BSNL Prepaid Plans: இந்த ரூ 98 ப்ரீபெய்ட் திட்டம் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்க! title=

BSNL Prepaid Plans details: நாட்டில் பரவி வரும் COVID-19 தொற்று நோய் காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களும், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக்கொள்ளும் மாணவர்களும், இணையத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த இணையத் தேவையை கருத்தில் கொண்டு, பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில், அற்புதமான சலுகைகளைக் கொண்ட பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.

பி‌எஸ்‌என்‌எல் ரூ .98 வவுச்சர் திட்டம்:
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் ரூ .98 வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 22 நாட்களுக்கு வரம்பற்ற இணையசேவை உங்களுக்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா என்ற அளவில் ஹை ஸ்பீட் இணையசேவையை பெறுவார்கள். அதன் பிறகு இணையசேவை வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆகக் குறைந்துவிடும் என்று ஜீ மீடியா ஊடகம் தெரிவித்துள்ளது.

ALSO READ |  BSNL மிகச்சிறந்த 4G ப்ரீபெய்ட் திட்டம்: வேறெங்கும் கிடைக்காத வரம்பற்ற தரவு, அழைப்பு

பி‌எஸ்‌என்‌எல் ரூ .97 வவுச்சர் திட்டம்
அதேபோல பிஎஸ்என்எல் ரூ 97 வவுச்சர் திட்டத்தில் 18 நாட்களுக்கு வரம்பற்ற இலவச இணையசேவை கிடைக்கிறது. இதில் சந்தாதாரர்களுக்கு தினசரி 2 ஜிபி அதிவேக இணையசேவை தரவு கிடைக்கும். அதன் பிறகு இன்டெர்நெட் வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளையும் பெறுவீர்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை தவிர, பிற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க, இதே போன்ற திட்டங்களை வழங்குகிறார்கள். 100 ரூபாய்க்கு குறைவான திட்டங்களை ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களும் அறிவித்து வருகின்றன. அதில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணையசேவை, இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ஏர்டெல், Vi, ஜியோ திட்டங்கள்:
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது ரூ .101 வவுச்சர் திட்டத்தில் 12 ஜிபி அதிவேக தரவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 1362 ஐ.யூ.சி (IUC) நிமிடங்கள் மதிப்புள்ள டாக் டைம் சலுகைகளையும் வழங்குகிறது. ஏர்டெல் ரூ .98 திட்டத்தில் 12 ஜிபி டேட்டாவுடன் அதிவேக சேவையை வழங்குகிறது. வோடாபோன் ஐடியா நிறுவனம் ரூ .98 வவுச்சர் திட்டத்தில் 12 ஜிபி அதிவேக இணையத்தை வழங்குகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ALSO READ |  Jio, Airtel, Vi வழங்கும் மிகச்சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்: எக்கச்சக்க நன்மைகள்

டிரிபியூன் இந்தியாவின் (Tribune India) அறிக்கையின்படி, கோவிட் தொற்று அதிகரித்து உள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சிம் கார்டுகளை வீட்டுக்கு டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது. சிம் கார்டை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் 9418012445 என்ற எண்ணிற்கு ஒரு செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News