Bike Mileage Tips: நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் பைக்குகளைப் பயன்படுத்துகின்றனர். பைக், அனைத்து வகுப்பு மக்களும் எளிதில் வாங்கக்கூடிய ஒரு வாகனமாகும். பைக் வைத்திருப்பவர்களின் மைலேஜ் அவரது வரவு செலவுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், பைக் (Bikes) வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பைக் அதிகபட்ச மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. சில உதவிக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் பைக்குகளின் மைலேஜை மேம்படுத்த முடியும். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவல்ல சில எளிய டிப்ஸ் இதோ:
சிறந்த மைலேஜ் பெற இந்த டிப்ஸைப் பின்பற்றுங்கள்:
1. நீங்கள் பைக் ஓட்டும் முறை உங்கல் மைலேஜை பெரிதும் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பைக்கை எந்த அளவுக்கு வேகமாக ஓட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பைக்கின் மைலேஜ் மோசமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பைக்கை ஓட்டும்போது வேகத்தில் கவனமாக இருப்பது அவசியமாகும். மேலும், சீராக இல்லாத பாதைகளில் பைக் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
2. எந்தவொரு வாகனத்தின் மைலேஜையும் (Mileage) பராமரிக்க, நீங்கள் அவ்வப்போது அந்த வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டும். சர்வீசின் போது, உங்கள் பைக்கின் என்ஜின் எண்ணெய் மாற்றப்பட்டு பைக்கில் உள்ள சிறிய குறைபாடுகளும் அகற்றப்படும். அவ்வப்போது பைக்கை சர்வீஸ் செய்வதால், உங்கள் பைக்கின் மைலேஜ் சிறப்பாக இருக்கும்.
ALSO READ: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா; விற்பனை தகவல் வெளியீடு
3. எரிபொருள் (Fuel) நிரப்பப்படும்போது பைக்கில் தரமான எரிபொருள் நிரப்பப்படுகிறதா என்பதை பெரும்பாலும் மக்கள் கவனிப்பதில்லை. நீங்கள் பைக்கில் நல்ல தரமான எரிபொருளை நிரப்பினால், உங்கள் பைக் அதிக மைலேஜ் தரும். இதைத் தவிர பைக்கில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மெக்கானிக்கைத் தொடர்பு கொண்டு அதை சரி செய்து விடுங்கள்.
4. நீங்கள் நகரத்திற்குள் பைக் சவாரி செய்யும்போது சிக்னலில் சிவப்பு விளக்கு இருந்து 1 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டி இருந்தால், உங்கள் பைக்கின் எஞ்சினை அணைத்து விடுங்கள். நீங்கள் இப்படி செய்தால், உங்கள் மைலேஜ் பெரிய அளவில் மேம்படும்.
5. உங்கள் பைக்கில் எப்போதும் நல்ல தரம் வாய்ந்த டயர்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பைக்கை ஓட்டும்போது கியர் மற்றும் பிரேக்குகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். இதனுடன், வேக பராமரிப்பிலும் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இந்த விஷயங்களை நீங்கள் மனதில் வைத்து பைக்கை ஓட்டுவதோடு பைக் பராமரிப்பிலும் கவனம் செலுத்தினால், உங்கள் பைக்குக்கு சிறந்த மைலேஜ் கிடைக்கும்.
ALSO READ: புதிய சக்திவாய்ந்த 650CC ஸ்க்ராம்ப்ளர் பைக்கை Royal Enfield விரைவில் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR