Budget 2022: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் கீழ், நிதியமைச்சர் சாமானிய மக்களுக்காக பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் கோர் பேங்கிங் அமைப்புடன் இணைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் (Union Budget 2022) உரையில் வங்கித் துறை மற்றும் வரி செலுத்துவோருக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பின் மூலம் அஞ்சலக சேவையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெரும் பயனடைவார்கள்.
இது தவிர, 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளும் திறக்கப்படும் என நிதியமைச்சர் (FM Nirmala Sitharaman) தெரிவித்தார். குறைந்த செலவில் டிஜிட்டல் வங்கியை ஊக்குவிக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதனுடன், டிஜிட்டல் வங்கிக்கு அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் என்றும் தெரிவித்தார்.
ALSO READ | விரைவில் இந்தியாவில் Digital Currency! டிஜிட்டல் கரன்ஸி என்றால் என்ன?
விவசாயிகள், மூத்த குடிமக்கள் பயனடைவார்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து 1.5 லட்சம் தபால் நிலையங்களும் அடிப்படை வங்கி அமைப்புடன் இணைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் மூலம் மக்கள் தங்கள் கணக்குகளை ஆன்லைனில் தாங்களே இயக்க முடியும். இதனுடன், வாடிக்கையாளர்கள் தாங்களாகவே தபால் அலுவலக கணக்குகள் மற்றும் பிற வங்கிகளில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். சீதாராமன் கூறுகையில், "2022 ஆம் ஆண்டில், நாட்டில் உள்ள மொத்த 1.5 லட்சம் தபால் நிலையங்களும் 100% அடிப்படை வங்கி அமைப்புடன் இணைக்கப்படும், மேலும் இது நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏடிஎம்கள் மற்றும் அஞ்சலகக் கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு இடையே நிதிப் பரிமாற்றம் மூலம் கணக்குகளைச் சேர்ப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் உதவும்.
இதன் மூலம் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நிதி அமைச்சர் கூறினார். தற்போது தபால் அலுவலகம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் சேமிப்பு கணக்கு சேவைகள் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான வங்கி சேவைகளை வழங்குகிறது.
ALSO READ | Cryptocurrency: கட்டுப்பாடா? தடையா? இந்திய அரசின் முடிவு என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR