உஷார்!! ரூ.2000 -ஐ தொடர்ந்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் பற்றி வந்த முக்கிய அப்டேட்

Currency Note: ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு மத்தியில் தற்போது ரூ.100, 200 மற்றும் 500 நோட்டுகள் குறித்த அப்டேட்டும் வெளியாகி உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2023, 05:32 PM IST
  • PNB சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது.
  • அருகில் உள்ள கிளையை தொடர்பு கொள்ள வேண்டும்.
  • ரிசர்வ் வங்கி விதிகளை வெளியிட்டது.
உஷார்!! ரூ.2000 -ஐ தொடர்ந்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் பற்றி வந்த முக்கிய அப்டேட்  title=

Currency Note News: ரூ.2000 நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசு வெள்ளிக்கிழமையன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும். இதனுடன், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரூ.2,000 நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த செய்திகளுக்கு நடுவே, தற்போது ரூ.100, 200 மற்றும் 500 நோட்டுகள் குறித்த அப்டேட்டும் வெளியாகி உள்ளது. இந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த பதிவில் காணலாம். 

PNB சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது

ரூபாய் நோட்டுகள் தொடர்பாக அவ்வப்போது பல போலிச் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இப்போது நாட்டின் அரசாங்க வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஒரு சிறப்பு சலுகையைக் கொண்டு வந்துள்ளது. அதில் உங்கள் பழைய மற்றும் சிதைந்த நோட்டுகளை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். PNB இந்த நோட்டுகளுக்கு பதிலாக புத்தம் புதிய நோட்டுகளை உங்களுக்கு வழங்குகிறது.

அருகில் உள்ள கிளையை தொடர்பு கொள்ள வேண்டும்

PNB தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டில், ‘பழைய அல்லது சிதைந்த நோட்டுகளை மாற்ற விரும்பினால், இப்போது இதை எளிதாக செய்யலாம். அதற்கு உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளலாம்’ என்று கூறியுள்ளது. இங்கே நீங்கள் நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | ₹2000 நோட்டை திரும்ப பெறுகிறது RBI... வெளியான பரபரப்பு தகவல்!

ரிசர்வ் வங்கி விதிகளை வெளியிட்டது

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, உங்களிடம் பழைய அல்லது சிதைந்த நோட்டுகள் இருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது வங்கியின் எந்த கிளைக்கும் சென்று அத்தகைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். வங்கி ஊழியர் யாராவது உங்கள் நோட்டை மாற்ற மறுத்தால், அது குறித்தும் புகார் அளிக்கலாம். எனினும், நோட்டின் நிலை எத்தனை மோசமாக உள்ளதோ, அதன் மதிப்பு அத்தனை குறையும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

எந்த சூழ்நிலையில் நோட்டுகள் மாற்றப்படும்?

இது குறித்து கூறியுள்ள ரிசர்வ் வங்கி, ‘கிழிந்த நோட்டின் ஒரு பகுதி இல்லாமல் இருந்தால், அல்லது ரூபாய் நோட்டு இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக இருந்து ஒன்றாக ஒட்டப்பட்டிருந்தால் அவை மாற்றிக்கொள்ளப்படும். ஆனால், நோட்டின் முக்கிய பகுதி இருக்க வேண்டும். கரன்சி நோட்டின் சில சிறப்புப் பகுதிகளான, வழங்கும் அதிகாரத்தின் பெயர், உத்தரவாதம் மற்றும் உறுதிமொழி விதிகள், கையெழுத்து, அசோகத் தூண், மகாத்மா காந்தியின் படம், வாட்டர் மார்க் போன்றவையும் இல்லாமல் இருந்தால் உங்கள் நோட்டு மாற்றப்படாது. நீண்ட காலமாக சந்தையில் புழக்கத்தில் இருந்ததால் பயன்படுத்த முடியாத அழுக்கடைந்த நிலையில் இருக்கும் நோட்டுகளையும் மாற்றிக்கொள்ளலாம்.’ என தெரிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுக்கள் தொடர்பான சில முக்கிய தகவல்கள்: 

- 2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 ரூபாய் நோட்டு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

- தனிநபர்கள் தற்போதுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

- ரூ.2000-ன் 10 நோட்டுகள், அதாவது ரூ.20,000 -ஐ ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம்.

- 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30, 2023 வரை செல்லும், ஆனால் அவை புழக்கத்தில் இருக்காது.

- 2018-19ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

- க்ளீன் நோட் பாலிசியின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது

- 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் சுமார் 89% மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

- 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகை ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றதால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

- வணிக வங்கிக் கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

- தனிநபர்கள் பரிமாற்ற வசதியை இலவசமாகப் பெறலாம்.

மேலும் படிக்க | 2000 Rupee Note: வங்கியை தவிர வேறு எங்கெல்லாம் 2000 ரூபாய் நோட்டை மாற்றலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News