இந்திய ரயில்வேவின் மிகப்பரிசு! மலிவாகப் பயணிக்க IRCTC இன் ஸ்பெஷல் பேக்கேஜ்

IRCTC 11 பகல் மற்றும் 10 இரவுகள் கொண்ட புதிய டூர் பேக்கேஜை வெளியிட்டுள்ளது. ஐஆர்சிடிசியின் இந்தப் புதிய சுற்றுலாத் தொகுப்பு 11 ஆகஸ்ட் 2023 முதல் தொடங்கப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 30, 2023, 07:33 PM IST
  • இந்தியாவின் கலாசாரத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு.
  • கட்டண செலவு எவ்வளவு.
  • இந்திய ரயில்வே புதிய டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
இந்திய ரயில்வேவின் மிகப்பரிசு! மலிவாகப் பயணிக்க IRCTC இன் ஸ்பெஷல் பேக்கேஜ் title=

இந்திய ரயில்வே புதிய சுற்றுலாத் தொகுப்பு: வைஷ்ணோ தேவிக்கு பயணம் செய்பவர்களுக்காக இந்திய ரயில்வே புதிய சுற்றுலாத் தொகுப்பைக் (டூர் பேக்கேஜ்)கொண்டு வந்துள்ளது. ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத், தேகோ அப்னா தேஷ் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் திட்டம் இது. இது வட இந்தியாவின் புகழ்பெற்ற மதத் தலமாகும். இங்கு செல்ல ஐஆர்சிடிசி (இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்) 11 நாட்கள் மற்றும் 10 இரவுகள் கொண்ட புதிய டூர் பேக்கேஜை வெளியிட்டுள்ளது. ஐஆர்சிடிசியின் இந்தப் புதிய சுற்றுலாத் தொகுப்பு 11 ஆகஸ்ட் 2023 முதல் தொடங்கப் போகிறது. மேலும் இந்த பேக்கேஜில் வைஷ்ணோ தேவியின் தரிசனம் மட்டும் இல்லாமல் இதனுடன், பிருந்தாவனம், ஹரித்வார், மதுரா, ரிஷிகேஷ், ஆக்ரா, அமிர்தசரஸ் மற்றும் அயோத்திக்கான பயணமும் அடங்கும்.

இந்தியாவின் கலாசாரத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு
இந்த சுற்றுலாத் தொகுப்பை (டூர் பேக்கேஜ்) மூலம் இந்திய கலாச்சாரம் பற்றிய கூடுதல் தகவல்களை மக்களுக்கு வழங்க IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) விரும்புகிறது. எனவே இதன் மூலம் அனைத்து இடங்களிலும் உள்ள பழமையான கோவில்கள், வரலாற்று இடங்கள் மற்றும் அரண்மனைகளை பார்வையிடவும், அங்குள்ள கலாச்சாரத்தை அறியவும் வாய்ப்பு கிடைக்கும். இந்த சுற்றுலாத் தொகுப்பின் மூலம், இந்தியாவின் மதம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அறிந்துகொள்ளும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ஸ்டார் போட்ட ரூ. 500 நோட்டு உங்ககிட்ட இருக்கா... ஆர்பிஐயின் முக்கிய அறிவிப்பு!

இந்த பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும்
பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் குறித்து, கயா ரயில் நிலையத்தின் நிர்வாக சுற்றுலா, மதுன்வதி ராய் சவுத்ரி தெரிவித்தார். இந்த ரயில் (இந்தியன் ரயில்வே) தனது பயணிகள் பயணத்தை ஆகஸ்ட் 11, 2023 அன்று தொடங்கும் என்றும் அவர் கூறினார். இது 21 ஆகஸ்ட் 2023 வரை தொடரும். தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பில் நிறுத்தப்படும் இந்த பயணம் கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கும். அதாவது, மொத்தம் 11 நாட்களுக்கு, இந்த ரயில் பயணிகளை வெவ்வேறு வரலாற்று இடங்களுக்கு அழைத்துச் செல்லும்.

கட்டண செலவு எவ்வளவு?
ஐஆர்சிடிசியின் (இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்) இந்த சிறப்பு சுற்றுலா (டூர் பேக்கேஜ்) ரயிலில் பயணிக்க, ஒரு நபருக்கு கன்ஃபர்ட் கிளாஸ் கட்டணம் ரூ.30,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேண்டர்ட் கிளாஸிற்கு ரூ.27,400, எகானமி வகுப்புக்கு ரூ.17,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐஆர்சிடிசி கட்டணத்தில் 33 சதவீதம் தள்ளுபடியும் வழங்குகிறது. இந்த டிக்கெட் விலையில் தங்குமிடம், உணவு, காப்பீடு மற்றும் சுற்றுலா மேலாண்மை ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: இரவு பயணத்திற்கான விதிகளில் மாற்றம்.... பயணிகள் ஹேப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News