செப்டம்பர் மாதத்தில் கட்டாயம் செய்யவேண்டிய முக்கிய பணிகள்: மறந்தால் சிக்கல்!!

September 2023: இந்த மாதம், அதாவது செப்டம்பர் 2023- இல் கண்டிப்பாக செய்துமுடிக்க வேண்டிய சில முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 2, 2023, 02:38 PM IST
  • தபால் நிலைய, பிற சிறு சேமிப்பு திட்டங்கள்.
  • டீமேட் கணக்கிற்கான நாமினேஷன்.
  • இலவச ஆதார் கணக்கு புதுப்பித்தல்.
செப்டம்பர் மாதத்தில் கட்டாயம் செய்யவேண்டிய முக்கிய பணிகள்: மறந்தால் சிக்கல்!!  title=

செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதம் சாமானியர்களுக்கான பல முக்கிய காலக்கெடுக்கள் உள்ளன. இவற்றை தவறவிட்டால், பின்னர் அவதியில் சிக்க வேண்டியதுதான். இந்த மாதம், அதாவது செப்டம்பர் 2023- இல் கண்டிப்பாக செய்துமுடிக்க வேண்டிய சில முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

தபால் நிலைய, பிற சிறு சேமிப்பு திட்டங்கள்:

தபால் அலுவலகங்களில் சிறு சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் அனைவரும் செப்டம்பர் 30 க்குள் தங்களது ஆதார் எண்ணை தங்களது கணக்கோடு இணைக்க வேண்டும். இதை செய்யத் தவறினால், உங்களுக்கு வட்டி வருவது நிறுத்தப்படும் மற்றும் உங்களால் சிறு சேமிப்பு திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியாமல் போகலாம். 

SBI We care

SBI வங்கி, SBI We care முதலீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீடித்துள்ளது. இந்த முதலீட்டு வாய்ப்பு, மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய வட்டி விகிதம் - 7.50% - 400 நாட்கள்.

IDBI Amrit Mahotsav FD
வட்டி விகிதங்கள்:
சராசரி குடிமகன், NRE/NRO -க்களுக்கு - 7.15%
மூத்த குடிமக்கள்: 7.65%

முன்னதாக, முறையே 7.10% மற்றும் 7.60% கொடுக்கப்பட்டு வந்தது. இந்த மாதம் முதல், வட்டி விகிதத்தில் 0.05% அதிகரிக்கப் பட்டுள்ளது.

Demat  கணக்கிற்கான Nomination

உங்களது டீமேட் கணக்கிற்க்கான Nomination செய்யவும் அல்லது அதிலிருந்து opt-out செய்வதற்கான உங்களது முடிவை தெரிவிக்கவும், கால அவகாசத்தை SEBI 30 செப்டம்பர் வரை நீடித்துள்ளது.

மேலும் படிக்க | 7th pay Commission ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... ஊதிய உயர்வு கணக்கீடு இதோ

இலவச ஆதார் கணக்கு புதுப்பித்தல் (Aadhaar Updation)

ஆதார் கணக்கின் விவரங்களை (demographic Information) அப்டேட் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 14 வரை UIDAI நீடித்துள்ளது. உங்களது ஆதார் கணக்கில் login செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால், இந்த மாறுதல்கள், எந்தவித கட்டணமும் இல்லாமல் புதுப்பிக்கப்படும்.

ரூ. 2,000 நோட்டு

ரிசர்வ் வங்கி முன்னர் அறிவித்திருந்தபடி, 2,000 ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30 முதல் செல்லுபடியாகாது. ஆகையால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், உங்களிடமுள்ள 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது டெபாசிட் செய்யுங்கள்.

LPG சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், நாட்டில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்கள் எரிவாயு விலையை மாற்றுகின்றன. ரக்ஷாபந்தனை முன்னிட்டு இந்திய அரசு 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்தது. 

பணியாளர்களுக்கு டேக் ஹோம் சம்பளம் அதிகரிக்கும்

செப்டம்பர் 2023 அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்கள் மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் முக்கியமானதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 1, 2023 முதல் வருமான வரித் துறையால் வாடகை இல்லா தங்குமிடம் தொடர்பான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம், முதலாளி அல்லது நிறுவனத்தால் வழங்கப்படும் வாடகையில்லா வீடுகளில் வசிப்பவர்கள் இப்போது அதிக சேமிப்பை பெற முடியும். உண்மையில், வாடகை இல்லாத வீடுகளை மதிப்பிடுவதற்கு, CBDT பெர்கியூசிட் மதிப்பீட்டு வரம்பை குறைத்துள்ளது. அதாவது இப்போது சம்பளத்தில் குறைவான வரி விலக்கு இருக்கும், இதன் விளைவாக ஒவ்வொரு மாதமும், கையில் கிடைக்கும் சம்பளம், அதாவது டேக் ஹோம் சேலரி அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | எஸ்எம்எஸ் மூலம் புது மோசடி: மக்களே கவனமாக இருங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News