Airtel Black : பைபர், DTH, மொபைல் என அனைத்திற்குமான அசத்தல் All in One திட்டம்

ஏர்டெல் பிளாக் (Airtel Black), வாடிக்கையாளர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவைகளை ஒரே நேரத்தில் பெற முடியும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 3, 2021, 03:15 PM IST
  • வாடிக்கையாளர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவைகளை ஒரே நேரத்தில் பெற முடியும்.
  • இதில் மொபைல் சேவைகளும் அடங்கும்.
  • ஏர்டெல் பிளாக் ஒரு ஒற்றை ரீசார்ஜ் சேவை.
Airtel Black : பைபர், DTH, மொபைல் என அனைத்திற்குமான அசத்தல் All in One திட்டம் title=

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் பிளாக் என்னும்  ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் பயனர்களுக்கான ள் Fiber, DTH மற்றும் மொபைல் ரீசார்ஜ் என அனைத்திற்கும் ஆன, ஒரு ஆல் இன் ஒன் ( All in One Plan) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இது மட்டுமல்லாமல், இந்த சேவையில் உங்கள் தேவைக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தனிப்பயனாக்கலாம். அதே நேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு இதிலிருந்து வசதி கிடைக்கும் என்று ஏர்டெல் கூறுகிறது. இதனால், ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி தேதிகளில் கட்டணம் செலுத்தும் தொலையில் இருந்தும் வாடிக்கையாலர் விடுபடலாம்.

பயனர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

ஏர்டெல் பிளாக் (Airtel Black), வாடிக்கையாளர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவைகளை ஒரே நேரத்தில் பெற முடியும். இதில் மொபைல் ரீசார்ஜும் அடங்கும். ஏர்டெல் பிளாக் ஒரு ஒற்றை ரீசார்ஜ் சேவை. மேலும் இதில் வாடிக்கையாளர்கள் புகார்கள் தீர்க்க தனிப்பட்ட மேலாளர் நியமிக்கப்படுவதோடு,  கஸ்டம்ர் கேருக்கான தனிப்பட்ட எண் ஆகியவை வழங்கப்படும். கஸ்டமர் கேர் IVR களுக்கு செல்லவும் அல்லது பிற சேவை வழங்குநர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.

இந்த சேவையின் மூலம் பயனர்கள் டிவி  சேனல்களை தடையின்றி,  குறுக்கீடு ஏதும் இல்லாமல் டிவி பார்க்க முடியும் 
திட்டங்கள் மற்றும் சலுகைகள் விபரம்:

ALSO READ | AC: மின்சார கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்

1. All in One plan
கட்டணம்- ரூ .2099 / மாதம் + ஜி.எஸ்.டி.
3 மொபைல் இணைப்புகள்
1 ஃபைபர் கனெக்‌ஷன்
1 DTH இணைப்பு

2. பைபர் + மொபைல் (FIBER +MOBILE)
விலை- ரூ .1598 / மாதம் + ஜி.எஸ்.டி.
2 மொபைல் கனெக்‌ஷன்
1 ஃபைபர் கனெக்‌ஷன்

3. DTH+MOBILE
விலை- மாதம் ரூ.1349 + ஜிஎஸ்டி
3 மொபைல் கனெக்‌ஷன்
1 DTH இணைப்பு

4. DTH+MOBILE
DTH + மொபைல்
விலை - மாதம் ரூ .998  + ஜிஎஸ்டி
2 மொபைல் கனெக்‌ஷன்
1 DTH இணைப்பு

ALSO READ |DigiLocker: DL, PAN, ஆதார், பாஸ்போர்ட், போன்றவை தொலையும் என்ற கவலை இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News