இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் வரும் ஜூன் 14 அன்று கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி வரை செல்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் சார்பில் இயக்கப்படும் சேவை ஆகும்.
கோவையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, எலகங்கா, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக, ஷீரடியை சென்றடையும்.
கோவையில் இருந்து 14.06.22 அன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு 16.06.2022 அன்று காலை 7.25க்கு ஷீரடி செல்லும் ரயில், மறுநாள் 17.6.2022 அன்று காலை 7.25க்கு சாய்நகர் ஷீரடியிலிருந்து புறப்பட்டு கோவைக்கு 18.06.2022 நண்பகல் 12.00 மணிக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரெயில் கோவையிலிருந்து 14.06.22 அன்று மாலை 6 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 7 மணி ஈரோடு 8 மணி, சேலம் 9.15, (15.6.2022) அன்று ஜோலார்பேட்டை இரவு 00.10, எலகங்கா விடியற் காலை 5 மணிக்கும், தர்மாவரம் 6.20, மந்த்ராலயம் ரோடு 11.00 மணிக்கும், மாலை 4.00 மணிக்கு மந்த்ரா ரோட்டிலிருந்து புறப்பட்டு வாடி இரவு 7.15க்கும், சென்று ஜூன் 16-ம் தேதி காலை 7.25க்கு ஷீரடியை சென்றடையும்.
அதேபோல் 17.6.2022 அன்று காலை 7.25 க்கு ஷீரடியிலிருந்து புறப்பட்டு வாடி ரெயில் நிலையத்திற்கு மாலை 4.30 க்கும், தர்மாவரத்திற்கு இரவு 11.10க்கும், எலங்காவிற்கு 18.6.2022 காலை 2.10க்கும், ஜோலார்பேட்டைக்கு காலை 5.55க்கும், சேலம் 7.30க்கும், ஈரோடு 8.30க்கும், திருப்பூர் 10.25க்கும், கோவைக்கு நண்பகல் 12.00 மணிக்கு வந்து சேரும் .
மேலும் படிக்க | ராமாயண பக்தி சுற்றுலா ரயில் துவக்கம்: 65000 கட்டணம்: 18 நாட்கள் பயணம்
மேலும், இந்திய இரயில்வே சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) வழங்கும் ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில், சர்வதேச யோகா தினமான 21ம் தேதியன்று இந்தியா - நேபாளம் இடையே முதன்முறையாக ராமாயண பக்தி சுற்றுலா பயணம் தொடங்குகிறது.
இந்த ரயில், இந்தியா - நேபாளம் வழியே 18 நாட்களுக்கு எட்டு மாநிலங்களில் 8,000 கி.மீ., துாரத்திற்கு செல்லும். இந்த பக்தி சுற்றுலாவில் முதல் முறையாக நேபாளத்தில், ஜனக்பூரில் அமைந்துள்ள அன்னை சீதாபிராட்டி கோவிலுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ராமரோடு தொடர்புடைய உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், மற்றும் 12 முக்கிய நகரங்களான அயோத்தி, பக்சர், ஜனக்பூர், சீதாமர்ஹி, காசி, பிரயாக், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராசலம் ஆகிய இடங்களை இந்த ரயில் பயணிக்கிறது. இது சுமார் 8,000 கி.மீ. வழித்தடங்களை கடந்து செல்கிறது.
இந்த ரயிலில் மொத்தம் 600 பயணிகள் பயணிக்க முடியும், ஒரு நபருக்கு தோராயமாக ரூ.65,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | IRCTCயின் ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலுக்கு அமோக வரவேற்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR