22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் சனி பெயர்ச்சி, மிகுந்த கவனம் தேவை

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு ராசி மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 12:36 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்து விடுதலை
  • மீன ராசியில் சனியின் தாக்கம்
  • சனி பெயர்ச்சி 2022
22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் சனி பெயர்ச்சி, மிகுந்த கவனம் தேவை title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு கிரகத்தின் ராசி மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை தரும். அதன்படி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சனியின் ராசி மாறப் போகிறது. பொதுவாக சனி தனது ஜென்ம ராசியில் மாற சுமார் 30 ஆண்டுகள் ஆகும். இந்த நேரத்தில் சனி மகர ராசியில் சஞ்சரிக்கிறார். சனி இந்த ராசிக்கு 24 ஜனவரி 2022 அன்று பிரவேசித்தார், இந்த காலம் 29 ஏப்ரல் 2022 அன்று முடிவடைகிறது. மேலும் இந்த நாளில் சனி தனது ஜென்ம ராசியான கும்பத்தில் மீண்டும் நுழைவார். அதன் பலன் பல ராசிக்காரர்களின் வாழ்வில் தென்படும். அதன்படி எந்த ராசிக்காரர்களை பாதிப்பு அதிகம் என்பதை காண்போம்.

மீன ராசிக்கு என்ன பாதிப்பு
22 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் எழரை நாட்டு சனி தொடங்கப் போகிறது. சனி கும்ப ராசிக்கு பிரவேசித்த்தும் மீன ராசிக்காரர்களுக்கு எழரை நாட்டு சனியின் பலன் தெரியும். மீனத்தை ஆளும் கிரகம் வியாழன். வியாழனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு சாதாரணமானது. இந்த இரண்டு கிரகங்களும் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை, எனவே எழரை நாட்டு சனி மீனத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தாது.

மேலும் படிக்க | கம்யூனிஸ்ட் நாட்டில் சிவராத்திரி! 1000 ஆண்டு பழமையான சிவ வழிபாடு!

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்து விடுதலை கிடைக்கும்
கும்ப ராசியில் சனி மாறுவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு எழரை நாட்டு சனியின் பாதியில் இருந்து விடுதலை கிடைக்கும். அதே சமயம் மகர ராசிக்காரர்களுக்கு கடைசி கட்டம், அதன் பிறகு கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டாம் கட்டம் தொடங்கும். 

சனியின் ராசி மாற்றத்தால் அதன் பலன் பல ராசிகளில் காணப்படுகிறது. சில ராசிகளில் எழரை நாட்டு சனி தொடங்குகிறது மற்றும் சில ராசிகளில் சனி தசை தொடங்குகிறது. அதன்படி தற்போது மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசை நடக்கிறது. கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் தொடங்கும் போதே கடகம் மற்றும் விருச்சிக ராசிகளில் சனி தசை தொடங்கும்.

ஏப்ரல் 29ம் தேதி சனியின் பரிவர்த்தனை நிகழும்
2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிபகவான் ராசி மாறுகிறார். ராசி மாற்றம் மூலம் சனிபகவான் கும்ப ராசிக்கு வருவார். 2020 முதல் சனி தேவன் மகர ராசியில் இருக்கிறார். 2021-ம் ஆண்டு சனியின் ராசியில் எந்த மாற்றமும் இல்லை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News