அடுத்த 3 முதல் 4 மாதங்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க முடியாது

Yes bank credit card: மாஸ்டர்கார்டு தடை காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு கடன் அட்டைகளை வங்கியால் வழங்க முடியாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 26, 2021, 04:50 PM IST
  • கடன் அட்டைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை யெஸ் வங்கி அறிவித்துள்ளது.
  • மாஸ்டர் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தடை விதித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கி தடையால் யெஸ் பேங்க் மிகவும் அதிகமாக பாதிப்படைந்துள்ளது.
அடுத்த 3 முதல் 4 மாதங்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க முடியாது title=

Yes bank credit card: அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன் அட்டைகள் (Credit Cards) வழங்கப்படும் என்றும், இது தொடர்பான முக்கியமான தகவல்களை வங்கியின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். புதிய கிரெடிட் கார்டுகள் தொடர்பாக Rupay நிறுவனத்துடன் ஏற்கனவே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் மற்றும் Visa நிறுவனத்துடனான ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்திடப்படும் என்று அவர் கூறியுள்ளனர். மேலும் அடுத்த 90 முதல் 120 நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அட்டைகளை வழங்கும் பணி தொடங்க்கப்படும் எனவும் தெரிவித்தார். 

மாஸ்டர் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு புதிய கிரெடிட் கார்டுகளை வங்கியால் வழங்க முடியாது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மாஸ்டர்கார்டு நிறுவனம் பின்பற்றவில்லை, அதன் பிறகு இந்தியாவில் புதிய கடன் அட்டைகளை மாஸ்டர்கார்டு நிறுவனம் (Mastercard Asia/Pacific Pte Ltd) வழங்கக்கூடாது என்றும், அதற்கு தடையும் RBI விதித்தது.

மாஸ்டர்கார்டு (Master Card) வாடிக்கையாளர்களின் தரவை இந்தியாவில் மட்டுமே சேமிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. அதே நேரத்தில் மாஸ்டர்கார்டு அதைப் பின்பற்றவில்லை. இதன் காரணமாக புதிய கடன் அட்டைகளை வழங்க மாஸ்டர்கார்டுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததால், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ALSO READ | ATM கார்டுக்கான RBI இன் 3 முக்கிய விதிகள்; நிதி இழப்புகளைத் தடுக்க இவற்றைப் பின்பற்றுங்கள்

அதாவது கடந்த சில மாதங்களில்  ஒரு லட்சம் கிரெடிட் கார்டுகள் யெஸ் வங்கி வழங்கியுள்ளது. அவை அனைத்தும் மாஸ்டர் கார்டுகள் என்பதால், ரிசர்வ் வங்கி தடையால் யெஸ் பேங்க் மிகவும் அதிகமாக பாதிப்படைந்துள்ளது.

இதன் காரணமாக ரூபே (Rupay) மற்றும் விசா (Visa) நிறுவனத்துடன் யெஸ் வங்கி ஒப்பந்தம் செய்து வருகிறது. இந்த ஒப்பந்தம் முடிந்தவுடன், புதிய கடன் அட்டைகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் புதிய கடன் அட்டைகள் (Credit Cards) என்று YES Bank அறிவித்துள்ளது.

ALSO READ | எச்சரிக்கை...! ATM, Credit அட்டை பயன்படுத்துவோர் கவனத்திற்கு...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News