மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக டஃப் ஃபைட் தரும 7 சீட்டர் கார் விலை ரூ 10 லட்சம்

Best 7 Seater suv in india: மாருதியின் ஏழு இருக்கைகள் கொண்ட கார் மாருதி எர்டிகாவை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் சந்தையில் உள்ள மற்றொரு ஏழு இருக்கை கார் எர்டிகாவுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 11, 2023, 12:50 PM IST
  • மாருதி எர்டிகாவுக்கு போட்டியான ஏழு இருக்கை கார்
  • 7 இருக்கைகள் கொண்ட கியா கேரன்ஸ் கார்
  • சந்தையில் கலக்கும் ’கூட்டுக்குடும்ப’ கார்கள்
மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக டஃப் ஃபைட் தரும 7 சீட்டர் கார் விலை ரூ 10 லட்சம்  title=

மாருதியின் ஏழு இருக்கைகள் கொண்ட கார் மாருதி எர்டிகாவை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள் ஆனால் சந்தையில் உள்ள மற்றொரு ஏழு இருக்கை கார் எர்டிகாவுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர்: ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்கள் தவிர, ஏழு இருக்கைகள் கொண்ட வாகனங்களும் இந்திய சந்தையில் அதிகம் வாங்கப்படுகின்றன.

பிப்ரவரியில் கார் விற்பனையைப் பற்றி பேசுகையில், மாருதி பலேனோ நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார். அதே நேரத்தில், எஸ்யூவிகளைப் பொறுத்தவரை, மாருதி பிரெஸ்ஸா அனைத்து வாகனங்களையும் முந்தி உள்ளது. மாருதியின் ஏழு இருக்கை கார் மாருதி எர்டிகாவும் வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படுகிறது,

மேலும் படிக்க | Best 7 seater car: 5.25 லட்ச ரூபாயில் 7 சீட்டர் கார்! அதிரடியாய் விலையை நிர்ணயித்த மாருதி

ஆனால் சந்தையில் தற்போதுள்ள மற்றொரு ஏழு இருக்கை கார் எர்டிகாவுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.  கியா கேரன்ஸ். விற்பனையைப் பொறுத்தவரை, இது எர்டிகாவை விட சற்றே பின்தங்கியுள்ளது, ஆனால் கடும் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எர்டிகாவின் விற்பனை குறைகிறது
மாருதி எர்டிகா பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்த கார் விற்பனையில் 20வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 6,472 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதேசமயம் 1 வருடத்திற்கு முன்பு அதாவது பிப்ரவரி 2022ல் 11,649 யூனிட் எர்டிகா விற்பனையானது. இதனால், இந்த காரின் விற்பனையில் 44 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Best Scooter: ஒரே மாதத்தில் 1 லட்சத்தையும் தாண்டிய இரு சக்கர வாகன விற்பனை! இது ஹீரோ

Kia Carens விற்பனையில் 22% வளர்ச்சி
கியா கேரன்ஸ் விறபனை, ஒட்டுமொத்த கார் விற்பனையில் எர்டிகாவிற்கு ஆடுத்து 21 வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மாதம், மொத்தம் 6,248 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 1 வருடத்திற்கு முன்பு அதாவது பிப்ரவரி 2022ல் 5,109 யூனிட் கேரன்ஸ் விற்பனையானது. இதனால், இந்த கார் விற்பனையில் 22% வளர்ச்சியைக் கண்டுள்ளது கியா கேரன்ஸ்.

கியா கேரன்ஸ் விலை
கியா கெய்ர்ன்ஸின் விலை ரூ. 10.20 லட்சம் முதல் ரூ. 18.45 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). பிரீமியம், பிரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் பிளஸ், லக்ஸரி மற்றும் லக்ஸரி பிளஸ் என ஐந்து வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கியா கெய்ர்ன்ஸ் 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட தளவமைப்புகளில் கிடைக்கிறது. இது விரைவில் ஐந்து இருக்கைகள் கொண்ட தளவமைப்பு கொண்டவையாகும்.

மேலும் படிக்க | இந்தியாவின் ஆடம்பர மின்சார கார்கள்! ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விலை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News